India vs New Zealand T20 Live Cricket Score: இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்குகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், கடந்த ஜன.6ம் தேதி வெலிங்டனில் நடந்த முதல் டி20 போட்டியில், இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வி அடைந்தது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மீண்டுமொருமுறை சரிந்தது. இதனால், டி20 வரலாற்றில் தனது மிக மோசமான தோல்வியை இந்தியா பதிவு செய்தது.
இந்நிலையில், தொடர இழக்காமல் இருக்க வேண்டுமெனில், இன்றைய போட்டியில் நிச்சயம் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நியூசி தொடர் முழுவதும் ரோஹித் ஃபார்ம் அவுட்டில் இருப்பது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
விராட் கோலி இல்லாமல், நியூசிலாந்தில் முதன் முறையாக டி20 தொடரை ரோஹித் வெல்வாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 11:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
NZ vs Ind 2nd T20 Live Score: இந்தியா vs நியூசிலாந்து லைவ்
1:13 PM: அவுட். சௌதீ (3) ஆட்டம் இழந்தார். தனது இரண்டாவது விக்கெட்டை பதிவு செய்தார் கலீல். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து 158 ரன்கள் எடுத்துள்ளது. தொடரை சமன்செய்யும் முனைப்புடன் இந்தியா களம் இறங்க உள்ளது.
,
,
12:04 PM: அவுட். க்ருனல் பாண்டியா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து. ஆறு ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 43 ரன்கள் எடுத்துள்ளது.
11:43 AM: அவுட். முதல் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து! கடந்த போட்டியில் பட்டையை கிளப்பிய செய்பெர்ட் 12 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
11:40 AM: இரண்டு ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது.
11:35 AM: இன்றைய போட்டியில் ஆடும் இந்திய அணி
,