Advertisment

15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து மோசமான தோல்வி: 4-1 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

Ind vs NZ 5th ODI Live Cricket Score Updates: இந்தியா vs நியூசிலாந்து

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs New Zealand 5th ODI Live Score - இந்தியா vs நியூசிலாந்து 5வது ஒருநாள் போட்டி

India vs New Zealand 5th ODI Live Score - இந்தியா vs நியூசிலாந்து 5வது ஒருநாள் போட்டி

நியூசிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலமாக ஒருநாள் தொடரை 4-1 என வென்றது. நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக இப்படி ஒரே தொடரில் 4 வெற்றிகளை இந்தியா குவித்திருப்பது இதுதான் முதல் முறை. 1999-ல் ஆஸ்திரேலியா, 2000-ல் இலங்கை அணிகள் இதேபோல 4 ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியிருக்கின்றன. 2004-ல் ஆஸ்திரேலியா 5 ஆட்டங்களிலும் நியூசிலாந்தை வீழ்த்தி 5-0 என வெற்றி பெற்றது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிடம் 4-1 என மோசமான தோல்வியை நியூசிலாந்து தழுவியிருக்கிறது. உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை அவற்றின் சொந்த மண்ணில் இந்தியா புரட்டி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டனில் இன்று நடைபெற்றது. இதில், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 3-1 என இந்தியா தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இன்று ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி  வெல்லிங்டனில் தொடங்கியது.

கடந்த இரு போட்டிகளாக காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் தோனி, இன்றைய போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்புவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. ஹாமில்டனில் நடந்த நான்காவது போட்டியில், ரோஹித் தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் முற்றிலும் தவிடு பொடியானது. இதனால், இந்தியாவின் தொடர் வெற்றிக்கு நியூசிலாந்து முற்றுப்புள்ளி வைத்தது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் மீண்டும் இந்திய அணி ஃபார்முக்கு திரும்புமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

NZ vs Ind 5th ODI : இந்தியா vs நியூசிலாந்து

03:05 PM - 44.1வது ஓவரில், நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

02:40 PM - தற்போது வரை எட்டு விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறி வருகிறது. 50 ரன்களுக்கும் மேல் எடுக்க வேண்டியிருக்கும் சூழ்நிலையில், கைவசம் 2 விக்கெட்டுகள் மீதமுள்ளன.

12:30 PM - டேஞ்சரஸ் பிளேயர் ராஸ் டெய்லர் 1 ரன்னில், பாண்ட்யா ஓவரில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்பீல் செய்யாமல் வெளியேறினார். ஆனால், மறுபடி செக் செய்த போது, பந்து ஸ்டெம்புகளுக்கு மேல் சென்றது தெரிய வந்தது.

12:20 PM - காலின் மன்ரோ 24 ரன்களில், ஷமி ஓவரில் போல்டானார்.

11:55 AM - நியூசிலாந்தின் முதல் விக்கெட்டாக ஹென்றி நிக்கோல்ஸ் 8 ரன்னில் அவுட்டானார். ஷமி ஓவரில் அவர் கேட்ச் ஆனார்.

11:25 AM - முதல் பத்து ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்து தள்ளாடியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஜய் ஷங்கர் - ராயுடு ஜோடி 98 ரன்கள் எடுத்து அணியை ஓரளவிற்கு சரிவில் இருந்து மீட்டது.

10:55 AM - அம்பதி ராயுடுவின் 90, விஜய் ஷங்கரின் 45, கேதர் ஜாதவின் 34 ஆகியவை 18-4 என்ற நிலையில் இருந்து இந்தியாவை மீட்டனர். இறுதியில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, 22 பந்தில் 45 ரன்கள் விளாசி இந்திய அணி 250 ரன்கள் கடக்க உதவினார். இதில், ஐந்து சிக்ஸர்களும் அடங்கும். 49.5வது ஓவரில், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது.

09:45 AM - சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த விஜய் ஷங்கர், 45 ரன்களில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து, அம்பதி ராயுடு தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

09:10 AM - விஜய் ஷங்கர், அம்பதி ராயுடு பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்து ஆடி வருகிறது.

08:00 AM - டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. கேப்டன் ரோஹித் 2 ரன்னிலும், தவான் 6 ரன்னிலும், ஷுப்மன் கில் 7 ரன்னிலும், தோனி 1 ரன்னிலும் என அடுத்தடுத்து இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.

India Vs New Zealand Mahendra Singh Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment