India vs New Zealand T20 Live Cricket Score: இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹாமில்டனில் தொடங்கியது.
சபாஷ்! சரியான போட்டி என்று சொல்ல வைத்திருக்கிறது இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான டி20 தொடர். வெல்லிங்டனில் நடந்த முதல் டி20 போட்டியில், இந்தியாவுக்கு 80 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை நியூசிலாந்து அளிக்க, ஆக்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கியூட் ரிப்ளை கொடுத்தது. நியூசிலாந்து மண்ணில் இந்தியா பெற்ற முதல் டி20 வெற்றி இதுதான்.
இந்நிலையில், இன்று ஹாமில்டனில் இரு அணிகளும் மோதும் இறுதி டி20 போட்டி, இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியை வென்றுவிட்டால், நியூசி மண்ணில், இந்தியா முதன் முறையாக டி20 கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும். கேப்டன் ரோஹித்தின் வெற்றி மகுடத்தில் நிச்சயம் இதுவொரு வைரக் கல்லாய் அமையும்.
NZ vs Ind 3rd T20: இந்தியா vs நியூசிலாந்து
03:55 PM - கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் - க்ருனல் பாண்ட்யா இணை 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என வென்றது.
03:30 PM - ஆறு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம். ஹர்திக் பாண்ட்யா 21 ரன்னில் கேட்ச் ஆனார்.
03:00 PM - சிறப்பாக ஆடிய தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ஷங்கர் 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார்.
02:35 PM - இந்தியா 5 ஓவர்கள் முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 5 ரன்னில் சான்ட்னர் ஓவரில் கேட்ச் ஆனார்.
02:00 PM - 213 ரன்கள் இலக்கு
நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக காலின் மன்ரோ 72 ரன்கள் எடுத்தார்.
01:30 PM - மன்ரோ அவுட்
40 பந்துகளில் 76 ரன்கள் விளாசிய காலின் மன்ரோ குல்தீப் ஓவரில் கேட்ச் ஆனார்.
01:10 PM - அதிரடியாக ஆடி வந்த டிம் செய்ஃபெர்ட் அவுட். 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த டிம் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.
12:45 PM - நியூசிலாந்து 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்துள்ளது.
12:15 PM - இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக சாஹல்க்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த இந்திய அணி, 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது.
12:00 PM - டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.