new zealand bowlers, new zealand test, new zealand india, colin de grandhomme, tim southee, kyle jamieson, trent boult, india vs new zealand, ind vs nz, india vs new zealand test, cricket news
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை, நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
Advertisment
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக டி20 தொடரில் பங்கேற்ற இந்திய அணி, தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisements
ஏமாற்றம் : இந்த வெற்றிநடை, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலும் தொடரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நியூசிலாந்து எழுச்சி : டி20 தொடரை இந்திய அணியிடம் இழந்த நியூசிலாந்து அணி சுதாரித்துக்கொண்டது. பொறுப்பை உணர்ந்த நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்தியாவை பழிதீர்த்துக்கொண்டது.
இரண்டு அணிகளும் தலா ஒரு தொடர்களை வென்றிருந்த நிலையில் டெஸ்ட் தொடர் துவங்கியது. டெஸ்ட் தொடரை, இந்திய அணி வெல்லும் அல்லது தொடர் சமனில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 242 ரன்களில் சுருண்டது.
நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கியது. இந்திய வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், நியூசிலாந்து அணிக்கு 132 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நியூசி.,வெற்றி : 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இதன்மூலம், டெஸ்ட் தொடரையும் 2-0 கணக்கில் வென்று அசத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil