Advertisment

U19 ஆசிய கோப்பை கிரிக்கெட்; 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

IND vs PAK U19: ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; பேட்டிங், பவுலிங்கில் அசத்திய பாகிஸ்தான்; 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி

author-image
WebDesk
New Update
IND vs PAK U19

IND vs PAK U19: ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. '' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தானும், 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பானும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

Advertisment

இந்தநிலையில், இன்றைய லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்

இந்தியா U19 அணி: ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, ருத்ரா படேல், உதய் சஹாரன் (கேப்டன்), முஷீர் கான், சச்சின் தாஸ், ஆரவெல்லி அவனிஷ் (விக்கெட் கீப்பர்), சௌமி பாண்டே, முருகன் அபிஷேக், ராஜ் லிம்பானி, நமன் திவாரி

பாகிஸ்தான் U19 அணி: ஷாமைல் ஹுசைன், ஷாஜாய்ப் கான், அசான் அவாய்ஸ், சாத் பெய்க் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), முகமது ஜீஷன், முகமது ரியாசுல்லா, தயப் ஆரிப், அராபத் மின்ஹாஸ், அலி அஸ்பாண்ட், அமீர் ஹாசன், உபைத் ஷா

இந்தியா பேட்டிங்

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி களமிறங்கினர். அர்ஷின் 24 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ருத்ரா படேல் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஆதர்ஷ் உடன் உதய் சஹாரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய ஆதர்ஷ் அரைசதம் அடித்து, 62 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய முஷீர் 2 ரன்களிலும், அவனிஷ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய சச்சின் தாஸ் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் ஆடிய உதய் அரை சதம் அடித்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய முருகன் அபிஷேக் 4 ரன்களிலும், ராஜ் லிம்பானி 7 ரன்களிலும் அவுட் ஆகினர். மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த சச்சின் அரை சதம் அடித்து 58 ரன்களில் கடைசி ஓவரில் அவுட் ஆனார். சௌமி பாண்டே 8 ரன்களும் நமன் திவாரி ரன்களும் எடுத்திருந்த நிலையில், இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஜீஷன் 4 விக்கெட்களையும், அமீர் மற்றும் உபாய்த் தலா 2 விக்கெட்களையும், அராபத் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் பேட்டிங்

260 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஷாமைல் ஹொசைன் 8 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து ஷாஜாய்ப் கான் மற்றும் அசான் அவாய்ஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இருவரும் 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷாஜாய்ப் கான் அரைசதம் அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஆடிய அசானும் அரைசதம் அடித்தார். இதனைத்தொடர்ந்து சாத் பெய்க் களமிறங்கி அதிரடியாக ஆடினார். இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். மறுமுனையில் ஆடிய அசான் சதம் அடித்து அசத்தினார். சாத் பெய்க் 68 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. அசான் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் அணி 47 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணியை பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்திய அணி தரப்பில் முருகன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Live Cricket Score India Vs Pakistan Asia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment