Advertisment

90% இடி- மழை வாய்ப்பு… இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் குளோஸ்?

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது கனமழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Pakistan Asia Cup Cup 2023: rain threat Pallekele Stadium Tamil News

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நாளை மறுநாள் சனிக்கிழமை (செப்டம்பர். 2ம் தேதி) இலங்கையின் பல்லகெலே மைதானத்தில் நடைபெற உள்ளது.

Pakistan vs India - Pallekele weather 2 september Tamil News: 16வது ஆசிய கோப்பை தொடர் நேற்று முதல்தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

Advertisment

இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை மண்ணில் நடைபெறும் நிலையில், நேற்று பாகிஸ்தானின் முல்தான் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள். இந்த ஆட்டத்தில் நேபாள அணியை பந்தாடிய பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் பாபர் அசாம் (151), இப்திகர் அகமது (109)ஆகியோர் சதம் அடித்து பேட்டிங்கில் மிரட்டினார்.

இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையின் பல்லகெலேயில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 2-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி வழக்கம் போல் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா- பாக்., மோதல்

இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரம போட்டியாளர்களான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நாளை மறுநாள் சனிக்கிழமை (செப்டம்பர். 2ம் தேதி) இலங்கையின் பல்லகெலே மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் நேபாள அணியை தும்சம் செய்துள்ள பாகிஸ்தான் அதே உத்வேகத்துடன் களமிறங்கும். தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தை பாகிஸ்தானுடன் தொடங்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

90% இடி- மழை வாய்ப்பு

இந்த நிலையில், இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தில் மலையின் குறுக்கீடு இருக்கும் என தெரிகிறது. போட்டி நடக்கும் பல்லகெலே நகரில் இடியுடன் கூடிய மழைக்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது. அன்றைய நாளில் அடர்த்தியான மேக மூட்டம் மற்றும் கனமழைக்கு வாய்ப்பு என்றும் அக்குவெதர் இணைய பக்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் கூட உள்ளன.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா (துணைகேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர் , அக்சர் படேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா

ரிசர்வ் வீரர்: சஞ்சு சாம்சன்

ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், சவுத் ஷகீல், சல்மான் அலி ஆகா, இப்திகார் அகமது, முகமது நவாஸ், உசாமா மிர், ஹரிஸ். ரவூப், நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி, தயப் தாஹிர், முகமது ஹாரிஸ் (wk), ஃபஹீம் அஷ்ரப், முகமது வாசிம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Indian Cricket India Vs Pakistan Asia Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment