Advertisment

IND vs PAK: அகமதாபாத் பிட்ச் யாருக்கு சாதகம்? மழையால் ஆட்டம் பாதிக்குமா?

உலகக் கோப்பை தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட்டின் பரம போட்டியாளர்களாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது.

author-image
WebDesk
New Update
India Vs Pakistan Cricket World Cup 2023 Ahmedabad Weather Forecast and pitch report in tamil

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் உலகக் கோப்பையின் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றியுடன் தங்கள் தொடரை தொடங்கின.

worldcup 2023 | india-vs-pakistan | ahmedabad13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட்டின் பரம போட்டியாளர்களாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 12வது லீக் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது.  

Advertisment

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சமீபத்தில் ஆசிய கோப்பையில் மோதின. இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்த நிலையில், முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் இந்தியாவின் வீழ்ந்தது. அந்த தோல்விக்கு இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் பழிதீர்க்க நினைக்கும். 

அதேசமயம், உலகக் கோப்பையிலும் இந்தியா அதன் வெற்றியின் வேகத்தைத் தொடரும். ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்பது இங்கு நினைவுகூரத்தத்து. உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானை இந்தியா 7 முறை வீழ்த்தியுள்ளது.  

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் உலகக் கோப்பையின் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றியுடன் தங்கள் தொடரை  தொடங்கின. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா இந்தப் போட்டியில் களமிறங்க, பாகிஸ்தான் நெதர்லாந்து மற்றும் இலங்கையை வீழ்த்தியது.

அகமதாபாத் பிட்ச் ரிப்போர்ட் 

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் பேட்டிங்கின் சொர்க்க பூமி என்று அறியப்படுகிறது. ஆனால், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்ஸ் மற்றும் திருப்பத்தை இங்கு எதிர்பார்க்கலாம். எனவே, இரு அணிகளின் பந்துவீச்சு வரிசையை பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும் 

டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டுள்ள இந்திய அணியின் தொடக்க வீரான சுப்மன் கில் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சி மேற்கொண்டாலும் அவர் நாளை போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மழை பெய்யுமா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துளளது. அதுஎன்னவென்றால், நாளை சனிக்கிழமை (அக்டோபர் 14) அகமதாபாத் நகரில் பூஜ்ஜிய சதவீத மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் பகல்நேர வெப்பநிலை 35 முதல் 40 டிகிரி வரை இருக்கும். மாலையில் அது 26 டிகிரி வரை குறையும். வெப்பமான சூழ்நிலையில் விளையாடுவதற்கு வீரர்கள் சிறந்த முறையில் தயாராக இருத்தல் வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ahmedabad Worldcup India Vs Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment