Advertisment

ஆசிய கோப்பை ஹாக்கி; பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி

India vs Pakistan Hockey Asian Championship 2023: ஹர்மன்பிரீத் சிங் சிறப்பான ஆட்டம்; பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ind vs pak

India vs Pakistan Hockey Asian Championship 2023

India vs Pakistan Hockey Asian Championship 2023: ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் புதன்கிழமை பலப்பரீட்சை நடத்தின.

Advertisment

நடப்பு ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை புதன்கிழமை எதிர்கொண்டது. இந்தியா இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களில் தோற்கடிக்கப்படாத நிலையில், பாகிஸ்தான் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: ஹாக்கி ‘எல் கிளாசிகோ’… இந்தியா – பாக்,. போட்டியை நேரில் காணும் ஸ்டாலின்!

பாகிஸ்தானுக்கு இன்றைய வெற்றி கடைசி நான்கு கட்டத்தில் அவர்களுக்கு ஒரு இடத்தை உறுதி செய்யும், ஆனால் இன்று தோல்வி அடைந்தால் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான போட்டியின் முடிவில் அவர்களின் தலைவிதியை விட்டுவிடும்.

மூன்று வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலையுடன் இந்தியா 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மலேசியா (9 புள்ளிகள்), தென் கொரியா (5), பாகிஸ்தான் (5), ஜப்பான் (2), சீனா (1) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 போட்டி சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்

இந்தியா: கிரிஷன் பகதூர் பதக், வருண் குமார், ஜர்மன்பிரீத் சிங், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், மன்தீப் சிங், ஹர்மன்ப்ரீத் சிங், சுமித், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங், சுக்ஜீத் சிங்.

பாகிஸ்தான்: அக்மல் ஹுசைன், அஹ்திஷாம் அஸ்லாம், அகில் அகமது, அர்ஷத் லியாகத், அப்துல் ரானா, அப்துல் ஹன்னான், ஜிக்ரியா ஹயாத், உசாமா பஷீர், உமர் பூட்டா, முஹம்மது சுஃப்யான் கான், அஃப்ராஸ்.

இன்றைய போட்டியின் தொடக்கத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க போட்டியிட்டன. முதல் காலிறுதியின் இறுதி நிமிடத்தில் ஹர்மன்பிரீத் கோல் அடித்து, இந்தியாவின் கணக்கை துவக்கினார். ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் மீண்டும் கோல் அடித்து அசத்தினார். அடுத்த பத்து நிமிடங்கள் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

மூன்றாவது காலிறுதியில் இந்திய வீரர் ஜக்ராஜ் சிங் பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். இதன் மூலம் இந்திய அணி 3-0 என முன்னிலைப் பெற்றது. அதேநேரம் பாகிஸ்தான் அணி எவ்வளவு முயற்சித்தும் இந்திய வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தால் கோல் அடிக்க முடியாமல் திணறியது.

கடைசி கட்டத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai India Pakistan Hockey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment