Advertisment

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

India vs Pakistan Cricket Match:ஆசிய கோப்பை 2018, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Pakistan Cricket Match, India won Pakistan in Asia Cup 2018 Match at Dubai: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட், ஆசிய கோப்பை 2018, இந்தியா வெற்றி

India vs Pakistan Cricket Match, India won Pakistan in Asia Cup 2018 Match at Dubai: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட், ஆசிய கோப்பை 2018, இந்தியா வெற்றி

India vs Pakistan  Cricket Match: இந்தியா-பாகிஸ்தான் இடையே இன்று துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 162 ரன்களில் சுருண்டது. பாகிஸ்தான் இன்னிங்ஸில் பாபர் அஸம் (47 ரன்கள்), சோயிப் மாலிக் (43 ரன்கள்),  ஃபஹீம் அஷ்ரப் (21 ரன்கள்), முகமது அமீர் (18 ரன்கள்) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தொட்டனர்.  புவனேஷ்வர் குமார் (3 விக்கெட்), பும்ரா (2 விக்கெட்), பகுதி நேர பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் (3 விக்கெட்) ஆகியோரின் அபார பந்து வீச்சு 162 ரன்களில் பாகிஸ்தானை சுருட்ட உதவி புரிந்தது. பின்னர் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் கொடுத்த நல்ல தொடக்கத்தால் இந்திய அணி எளிதில் வெற்றியை நோக்கி நகர்ந்தது.  29 ஓவர்கள் முடிவில் இந்தியா வெற்றி இலக்கைத் தொட்டது.

Advertisment

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு உண்டு. இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு (2017) ஜூன் 18-ம் தேதி சாம்பியன் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் சந்தித்தன. இந்தியா மறக்க வேண்டிய போட்டியாக அது அமைந்தது. 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அதில் ஜெயித்தது குறிப்பிடத்தக்கது.

Read More: India vs Pakistan Asia Cup 2018: இன்று இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ‘லைவ்’வாக மொபைலிலும் பார்க்கலாம்!

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒட்டுமொத்தமாக 196 முறை மோதியிருக்கின்றன. அவற்றில் பாகிஸ்தான் 86 முறையும், இந்தியா 67 முறையும் வெற்றி பெற்றன. ஆனாலும் சாம்பியன் கோப்பை ஃபைனலை தவிர்த்து, அண்மை ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்திருக்கிறது.

Asia Cup 2018 India vs Pakistan Cricket Match: ஆசிய கோப்பை 2018, இந்தியா-பாகிஸ்தான் போட்டி லைவ் ஸ்கோர், அப்டேட்:

11:05 PM : 29 ஓவர்கள் முடிவில் இந்தியா 164 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கைத் தொட்டது. தினேஷ் கார்த்திக்  37 பந்துகளில் 31 ரன்கள், ராயுடு 46 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் நின்றனர். 21 ஓவர்கள் மிச்சம் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

10:50 PM: 25 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை எடுத்திருந்தது. வெற்றிக்கு மேலும் 26 ரன்களே தேவை! ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர். வெற்றி முகத்தில் இந்திய அணி உள்ளது.

10:20 PM: 17-வது ஓவரில் ஃபஹீம் பந்து வீச்சில் தவான் எளிதாக கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் எடுத்த ரன்கள் 46. அப்போது இந்தியா ஸ்கோர் 16.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள்!

10:15 PM: 16 ஓவர்கள் முடிவில் இந்தியா 100 ரன்களை தொட்டது. அப்போது தவான் 42 ரன்களிலும், ராயுடு 3 ரன்களிலும் களத்தில் நின்றனர்.

10:00 PM: 39 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் ஷர்மா கிளீன் போல்ட் ஆனார். வேகப் பந்து வீச்சை துவம்சம் செய்த ரோஹித், ஷதாப் கானின் சுழலில் முதல் பந்திலேயே அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்தியாவின் ஸ்கோர் 13.1 ஓவர்களில் 86 ரன்கள் ஆகும். தவான் 30 ரன்களில் களத்தில் நின்றார்.

9:55 PM: 12 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் குவித்தது. ரோஹித் ஷர்மா 40 ரன்களுடனும், ஷிகர் தவான் 30 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

9:45 PM: 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது. ரோஹித் ஷர்மா 30 ரன்களுடனும், ஷிகர் தவான் 18 ரன்களுடனும் களத்தில் நின்றனர். பாகிஸ்தான் நட்சத்திர பந்து வீச்சாளர் முகமது அமீர் பந்து வீச்சை ரோஹித் ஷர்மா நொறுக்கித் தள்ளினார்.

பந்துகளை பாகிஸ்தான் வீரர்கள் வேகமாக வீசியபோதும், பெரிதாக ஸ்விங் ஆகவில்லை. இதனை ரோஹித்தும், தவானும் பயன்படுத்தி நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

9:10 PM: இந்தியா இன்னிங்ஸை வழக்கம்போல ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் தொடங்கினர். 4 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது.

8:30 PM: பாகிஸ்தான் இன்னிங்ஸில் பாபர் அஸம் (47 ரன்கள்), சோயிப் மாலிக் (43 ரன்கள்),  ஃபஹீம் அஷ்ரப் (21 ரன்கள்), முகமது அமீர் (18 ரன்கள்) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தொட்டனர்.  புவனேஷ்வர் குமார் (3 விக்கெட்), பும்ரா (2 விக்கெட்), பகுதி நேர பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் (3 விக்கெட்) ஆகியோரின் அபார பந்து வீச்சு 162 ரன்களில் பாகிஸ்தானை சுருட்ட உதவி புரிந்தது.

8:10 PM : 43.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் புவனேஷ்வர், கேதர் ஜாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

8:03 PM : 43-வது ஓவரில் ஹசன் அலியை ஒரு ரன்னில் புவனேஸ்வர்குமார் வீழ்த்தினார். தினேஷ் கார்த்திக்கிடம் அவர் கேட்ச் ஆனார்.  பாகிஸ்தான் ஸ்கோர் 160/9.

8:00 PM; 42-வது ஓவரில் பும்ரா பந்து வீச்சில் ஃபஹீம் அஷ்ரப் வீழ்ந்தார். அவர் எடுத்த ரன்கள் 21.  தவானிடம் அவர் கேட்ச் ஆனார். அப்போது பாகிஸ்தான் ஸ்கோர் 158/8.

7:50 PM: 39 -வது ஓவரில் பாகிஸ்தான் 150 ரன்களை கடந்தது.  ஃபஹீம் அஷ்ரப் 20 ரன்களிலும், முகமது அமீர் 14 ரன்களிலும் ஆடிக் கொண்டிருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் பாபர் அசம் 47 ரன்களும், சோயிப் மாலிக் 43 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். தற்போது களத்தில் நிற்கும் ஃபஹீம் அஷ்ரப், முகமது அமீர் ஆகியோரை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆனார்கள்.

7:40 PM: 36-வது ஓவரில் ஃபஹீம் அஷ்ரப் 13 ரன்களில் சாகல் பந்தில் அவரிடமே கேட்ச் ஆகியிருக்க வேண்டும். எளிய கேட்சை சாகல் வீணடித்தார். அப்போது பாகிஸ்தான் ஸ்கோர் 138/7.

7:25 PM: பாகிஸ்தான் 7-வது விக்கெட்டை இழந்தது. சதாப் கான் 8 ரன்களில் கேதர் ஜாதவ் பந்து வீச்சில் வீழ்ந்தார்.

7:05 PM : கேதர் ஜாதவ் தனது அடுத்த ஓவரில் ஆசிப் அலியை 9 ரன்களில் வெளியேற்றினார். விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்தார் ஆசிப்.  அதே ஓவர்களில் சோயிப் மாலிக் 43 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனால் 29 ஓவர்களில் 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது பாகிஸ்தான்.

6:55 PM: 4-வது விக்கெட்டாக சர்ஃப்ராஸ் அகமது 6 ரன்களில் வீழ்ந்தார். கேதர் ஜாதவ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அவர். 24.5 ஓவர்களில் 96 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்.

India vs Pakistan LIVE Cricket Match Score updates: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்திய பூரிப்பில் இந்திய வீரர்கள் India vs Pakistan LIVE Cricket Match Score updates: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்திய பூரிப்பில் இந்திய வீரர்கள்

6:45 PM ; 21.2-வது ஓவரில் 85 ரன்களுக்கு 3-வது விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான். அசம் விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தினார். அசம் 47 ரன்களில் கிளீன் போல்ட் ஆனார்.

6. 00 PM : 13 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்களை எடுத்துள்ளது.

5. 45 PM : 8 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்களை எடுத்துள்ளது.

5. 40 PM : பாகிஸ்தானின் மற்றொரு தொடக்க வீரர் பகர் ஜமான் அவுட். இவர் ஒன்பது பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனார்.

5. 35 PM :  பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்த விக்கெட்டை புவனேஷ் குமார் எடுத்தார்.

5. 30 PM :  பாகிஸ்தானின் 2 ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய புவனேஷ்குமார்!

4. 50 PM :  பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு.

4. 30 PM :  டாஸ்  வென்ற  பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

India vs Pakistan LIVE, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் India vs Pakistan LIVE, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்

4. 00 PM : பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து கூறிய முன்னாள் கிரிக்கெர் வீரர் முகமது வாசிம்

4. 00 PM :  இந்திய அணி வீரர்கள் ஸ்டேடியத்திற்கு புறப்பட்டனர்.

3. 30 PM :  2012 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஆசிய கோப்பை பகுதியின் சிறிய தொகுப்பு உங்கள் பார்வைக்கு..

2. 50 PM : பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் விபரம் : ஃபார்கர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசாம், சோயிப் மாலிக், சர்ஃப்ராஸ் அகமது, ஆசிப் அலி, ஷதாப் கான், ஃபெயீம் அஷ்ரஃப், உஸ்மான் கான், முகமது அமிர் / ஜுனத் கான், ஹசன் அலி

2. 30 PM : இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் விபரம்: ஷிகர் தவான், ரோகித் சர்மா,  ராகுல் / தினேஷ் கார்த்திக், எம்.எஸ் தோனி, கேதர் ஜாதவ், புவனேஸ்வர் குமார், யூசுந்தேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜாஸ்ரிட் பம்ரா, ஹார்டிக் பாண்டியா / கலீல் அகமது

2. 10 PM :  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  இந்தியா - பாகிஸ்தான்  போட்டியைக் காண ரசிகர்கள்   தயாராகி வருகின்றன.

1. 50 PM :  வரலாறு  மீண்டும் அரங்கேறுமா?

பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமன் சென்ற  வருடம்  நடந்த போட்டியில்  களத்தில் விஸ்ரூபம் எடுத்து சிக்ஸ், ஃபாரோர்களை விளாசினார். இந்த வரலாறு இன்றைய போட்டியில் மீண்டும் அரங்கேறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

1:25 PM: இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 5 ஆசியக் கோப்பை போட்டிகளின் முடிவுகள் இங்கே:

2008 ஆசியக் கோப்பை: குரூப் ஸ்டேஜ் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, சூப்பர் 2 ஸ்டேஜில் பாகிஸ்தானிடம் தோற்றது.

2010 ஆசிய கோப்பை: பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

2012 ஆசிய கோப்பை: பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

2014 ஆசிய கோப்பை: இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது.

2016 ஆசிய கோப்பை: பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

1:00 PM: பாகிஸ்தான் வீரர் ஹசன் கூறுகையில், ‘இப்போதைக்கு நாங்கள் ‘டாப்’பில் இருக்கிறோம். முந்தைய தோல்வி (சாம்பியன் கோப்பை) காரணமாக இந்தியா நெருக்கடியில் இருக்கிறது.

ஐக்கிய அரபு எமிரேடைப் பொறுத்தவரை, இது எங்களுக்கு உள்ளூர் போன்ற அனுகூலத்தை தருகிறது. காரணம், நீண்ட காலமாக நாங்கள் இங்கு விளையாடி வருகிறோம். எனவே இந்த சூழலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.

இந்தியா நல்ல அணிதான். எனினும் நான் 5 விக்கெட் எடுக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவதை இலக்காக வைத்திருக்கிறேன். அதன் மூலமாக உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்த முடியும். எனக்கும் நெருக்கடி இருக்கிறது. ஆனால் அதுவே கூடுதலாக ஆட்டத்தில் ஜொலிக்க தூண்டுதலாக அமையும்’ என்றார் அவர்.

12:30 PM: இந்தியா-பாகிஸ்தான் இடையே இதுவரை நடைபெற்ற ஆசியக் கோப்பை 12 போட்டிகளில் இந்தியா 6 முறை வெற்றி பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் 5 வெற்றிகளை பெற்றது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை.

இந்தியா 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டம் வென்றிருக்கின்றன. இந்த வகையில் இந்தியாவின் சாதனை சரித்திரம் வலுவாக இருக்கிறது.

12:00 PM: துபாய் சர்வதேச விளையாட்டு அரங்கில் இன்று (செப்டம்பர் 19) இரு அணிகள் இடையே நடைபெறும் போட்டியில் இந்தியாவுக்கு கூடுதல் நெருக்கடி இருப்பது நிஜம்! காரணம், கடைசியாக பாகிஸ்தானுடன் நடந்திருக்கும் ஆட்டத்தில் தோற்றிருப்பது மட்டுமல்லாமல், நேற்று ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. தவிர, ஹாங்காங்கிற்கு எதிராக கடைசி 10 ஓவர்களில் வெறும் 48 ரன்களை மட்டுமே இந்தியா குவித்தது.

துபாய் சீதோஷ்ண நிலையில் அடுத்தடுத்த நாட்களில் போட்டியில் பங்கேற்பதும் சிரமமானது. ஹாங்காங்கை புரட்டியெடுத்த பாகிஸ்தான் ஒருநாள் ஓய்வு எடுத்துக்கொண்டு இந்தியாவுடம் மோதுவது அந்த அணிக்கு அனுகூலம்!

 

Asia Cup 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment