Advertisment

India vs Pakistan: தவான், ரோஹித் அபார சதம்! இந்தியா மெகா வெற்றி!

India vs Pakistan: இந்தியா மற்றொரு கன்வின்சிங் வெற்றியை பதிவு செய்துள்ளது. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹியூஜ் வெற்றி. கங்கிராட்ஸ் டீம் இந்தியா!. கேப்டன் ரோஹித் 111(n.o) ரன்களும், தவான் 114 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பெற வைத்தனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

India vs Pakistan: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், துபாயில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது.

Advertisment

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர் 4 சுற்றில், இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுகின்றன. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி, சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசத்தையும் வீழ்த்தி இந்தியா தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

அதேசமயம், லீக் சுற்றில் இந்தியாவிடம் மட்டும் தோற்ற பாகிஸ்தான், சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை போராடி வீழ்த்தியது. இந்நிலையில், இன்று மீண்டும் இந்தியாவும், பாகிஸ்தானும் களம் கண்டது.

India vs Pakistan match: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் 2018:

11:55 PM: இந்தியா மற்றொரு கன்வின்சிங் வெற்றியை பதிவு செய்துள்ளது. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹியூஜ் வெற்றி. கங்கிராட்ஸ் டீம் இந்தியா!. கேப்டன் ரோஹித் 111(n.o) ரன்களும், தவான் 114 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பெற வைத்தனர்.

11:35 PM: ரோஹித் ஷர்மா தனது 19வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

11:30 PM: 115 ரன்னில் தவான் ரன் அவுட் ஆனார். ஹசன் அலியால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, பர்த்டே பாய் அம்பதி ராயுடு களமிறங்கியுள்ளார்.

11:15 PM: 15வது ஒருநாள் சதத்தை பவுண்டரியுடன் நிறைவு செய்தார் ஷிகர் தவான். ஒட்டுமொத்த கிரவுண்டும் எழுந்து நின்று சல்யூட் செய்ய, அவரின் மனைவி ஃபிளையிங் கிஸ் அனுப்ப, ஒரே என்ஜாய்மென்ட் தான் போங்க.. அடுத்து ரோஹித் செஞ்சுரிக்கு வெயிட்டிங்!.

11:00 PM: ரோஹித்திடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. சாதாரண பந்துகளை சிக்ஸருக்கு தூக்க மாட்டார். ஆனால், அசாதாரண பந்துகளை கொன்றுவிடுவார். அதற்காக அவருக்கு சாதாரண பந்து போட்டால் எப்படி? ஷதப் கானின் அடுத்தடுத்த ஓவர்களில் அப்படித்தான் சிக்ஸர்களை பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார் ரோஹித்.

10:40 PM: 37வது ஒருநாள் அரைசதம் அடித்தார் ரோஹித் ஷர்மா. விக்கெட் இழப்பின்றி இந்தியா விளையாடிக் கொண்டிருக்கிறது. தவான் அரைசதம் அடித்த போதும் சரி... ரோஹித் அரைசதம் அடித்த போதும் சரி... ரோஹித்தின் மனைவி எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தார்.

10:30 PM: இன்றைய போட்டியை சேர்த்து 13வது முறையாக ரோஹித் - தவான் கூட்டணி ஒருநாள் போட்டிகளில் சதம் கூட்டணி அமைத்திருக்கிறது. திஸ் வாட் இந்தியா நீட்ஸ்!. அதில் ஒரு ஆச்சர்யம் பாருங்க...

Most 100+ opening partnerships in ODIs:

21  சச்சின்- கங்குலி

16 கில்கிறிஸ்ட் - ஹெய்டன்

15 கிரீனிட்ஜ் - ஹெய்ன்ஸ்

13 ரோஹித் - தவான்

12 சச்சின் - சேவாக்

10:20 PM: எகிறும் பாகிஸ்தான் BP. சதத்தை நோக்கி ஒப்பனிங் பார்ட்னர்ஷிப். கடந்த போட்டியில் ஸ்பின்னர் ஷதப் கானின் பந்தில் போல்டானதால், அவரது பந்தில் மிக கவனமாக ஆடுகிறார் ரோஹித். அதுமட்டுமின்றி, 26வது அரை சதத்தை விளாசினார் 'சவுத் பா' தவான்.

10:00 PM: தவான் தனது கியரை மாற்றிச் செல்ல, ரோஹித் நிதானம் காட்டிக் கொண்டிருக்கிறார். இதுதான் பெஸ்ட் மூவ். சீம், ஸ்பின் என பாகிஸ்தானின் இரண்டு ஆயுதங்களையும் இந்திய ஒப்பனர்ஸ் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

09:40 PM: தவான், ரோஹித் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தியுள்ளனர். பாகிஸ்தானின் லெப்ட் ஆர்ம் பவுலர்களை நேர்த்தியாக எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஷஹீன் ஓவரில் ரோஹித் அசால்ட் சேதுவாக ஒரு சிக்ஸ் அடிக்க, ரசிகர்களின் கரகோஷம் அதிர்ந்தது. இதனால், பாகிஸ்தானும் 8வது ஓவரிலேயே ஸ்பின்னரை இறக்கியுள்ளது.

09: 15 PM: இந்தியா பேட்டிங் செய்ய களமிறங்கியது. ரோஹித், தவான் ஆன் தி கிரீஸ். லெப்ட் ஆர்ம் பாகிஸ்தான் சீமர்ஸ்களை சமாளிக்குமா இந்திய பேட்டிங்?

08:25 PM: பும்ராவின் 'சீமராஜா' யார்க்கரில், ஷதப் கான் 10 ரன்னில் போல்டானார். முடிவில், பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா 238 ரன்கள் எடுத்தால் வெற்றி. பாகிஸ்தான் தரப்பில் சோயப் மாலிக் அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா, சாஹல், குல்தீப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அதிலும், பும்ரா 10 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

08:00 PM: மிஸ்ஸிங் தி லென்த்... மிஸ்ஸிங் தி லைன்... சாஹலின் கூக்ளி பந்தில் அவுட்டானார் ஆசிஃப் அலி. புவனேஷ் ஓவரை புரட்டியெடுத்த அலி, சாஹலின் பந்தை சரியாக கணிக்கவில்லை. கண்மூடி சுத்தினார்... ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். வெளியே போ என சாஹல் வழியனுப்ப, நொந்துக் கொண்டே சென்றார். அலி, சாஹலின் 50வது விக்கெட் ஆவார்.

07:52 PM: வாவ்! பும்ரா ஓவரில், சோயப் மாலிக் ஃபிளிக் செய்ய, அதை டைவ் அடித்து கேட்சாக்கினார் தல தோனி.

சோயப் மாலிக்கை அவுட்டாக்கிய பும்ரா சோயப் மாலிக்கை அவுட்டாக்கிய பும்ரா

07:45 PM: புவனேஷ் குமார் வீசிய 41வது ஓவரில் மட்டும் 22 ரன்கள் நொறுக்கப்பட்டது. சோயப் மாலிக் ஒரு பவுண்டரி அடிக்க, 2 ஹியூஜ் சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார் இளம் வீரர் ஆசிஃப் அலி.

07:30 PM: சர்ப்ராஸ் அவுட்!. குல்தீப் வீசிய 38.5வது ஓவரில், ஆஃப் சைடில் பந்தை அடிக்க, ரோஹித் கையில் பந்து தஞ்சமானது. 44 ரன்னில் அவர் அவுட்டானார். நான்காவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து பிரிந்தது மாலிக் - சர்ப்ராஸ் ஜோடி.

07:15 PM: 43வது ஒருநாள் அரைசதம் அடித்தார் சோயப் மாலிக். மாலிக் - சர்ப்ரஸ் கூட்டணி மிக அருமையாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகிறது. இந்தியா, விக்கெட் வீழ்த்த வேண்டிய நேரமிது.

07:00 PM: அடடா! என்ன ஒரு கிரிக்கெட் கணிப்பு! இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு ஆகாது அக்கா!

06:47 PM: கங்கிராட்ஸ்! பாகிஸ்தானுக்கு இது தேவையான ஒன்று!. அரைசதம் அடித்தது மாலிக் - சர்ப்ரஸ் 4வது விக்கெட் பார்ட்னர்ஷிப்.

06:40 PM: மோஸ்ட் சீனியர் வீரர் சோயப் மாலிக்கும், சீனியர் சர்ப்ரஸ் அஹ்மதும் களத்தில் நிற்கிறார்கள். மிக மிக முக்கியமான பார்ட்னர்ஷிப் இது. 6வது சாய்ஸ் பவுலரான கேதர் ஜாதவ் பவுலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

06:25 PM: சோயப் மாலிக்கும், கேப்டன் சர்ப்ரஸ்ஸும் களத்தில் உள்ளனர். இதில், ஆச்சர்யம் என்னவெனில், ஃபக்கர் சமான் எல்பி ஆகவில்லை. அவர் ரிவியூ கேட்டிருந்தால், நாட் அவுட் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், என்ன காரணமோ அவர் ரிவியூ கேட்கவில்லை. இதனால், தேவையில்லாத விக்கெட்டாக பாகிஸ்தானிற்கு அது அமைந்தது.

06:05 PM:  சரியும் பாகிஸ்தான் விக்கெட்டுகள். ஜடேஜா வீசிய 15.5வது ஓவரில், பந்தை ஸ்டாக் செய்த சர்ஃபரஸ் ரன்னிங் கொடுக்க, எதிர்முனையில் இருந்த பாபர் அசம் இதை நம்பி பாதி தூரம் ஓடிவந்து திரும்ப கிரீஸ் நோக்கி செல்வதற்குள், சாஹல் வீசிய த்ரோவில் பாபர் ரன் அவுட் ஆனார்.

06:00 PM: சாஹலைத் தொடர்ந்து, குல்தீப் பந்து வீச அழைக்கப்பட்டார். 14.3வது ஓவரில், சமான் 31 ரன்கள் எடுத்திருந்த போது, பந்தை ஸ்வீப் செய்ய முயன்றார். ஆனால், அவர் நிலைத் தடுமாறி விழ, பந்து ஸ்டெம்புகளுக்கு நேராக அவரது கையில் பட்டது. தோனி ஸ்ட்ராங் அப்பீல் செய்ய, சமான் அவுட் கொடுக்கப்பட்டார்.

05:35 PM:  தட் ஈஸ் மகேந்திர சிங் தோனி! 7வது ஓவரை வீச ஸ்பின்னர் யுவேந்திர சாஹல் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல் ஹக் பேடில் பந்து பட, அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. உடனடியாக ரோஹித், தோனியிடம் ஆலோசனை கேட்க, தோனியோ ரிவியூ கேட்டுப் பார் என தலை அசைத்து சிக்னல் கொடுக்க, தேர்ட் அம்பயர் ரிவியூ செய்ய, இமாம் அவுட் என உறுதி செய்யப்பட்டது. பத்து ரன்னில் இமாம் வெளியேறினார். தல ராக்ஸ்!

05:30 PM: பாகிஸ்தானின் இரு தொடக்க வீரர்களும் கான்ஃபிடன்ட்டுடன் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்களின் ஷாட் கனெக்ட்டிங்கில் அது நன்றாக தெரிகிறது. இன்று ஒரு சவாலான ஆட்டம் காத்திருப்பது போல நமக்கு தெரிகிறது. உலகின் நம்பர்.1 வேகப்பந்து வீச்சாளரை மிக கவனமுடன் ஆடி வருகின்றனர் பாக் ஒப்பனர்கள்.

05:15 PM: தொடக்க வீரர்களாக ஒருகாலத்தில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கினால், மலை போல ஸ்டெம்புகளை மறைத்துக் கொண்டு நின்று ஆடுவாரே இன்சமாம் உல் ஹக், அவரது உறவினர் பையன் இமாம் உல் ஹக்கும், கடந்த வருடம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப் போட்டியில் சதம் விளாசியவருமான ஃபக்கர் சமானும் களமிறங்கி உள்ளனர்.

05:00 PM: ஒரே வாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் இரண்டாவது ஆட்டம் தொடங்கியது. வெயில் கொளுத்த மேட்ச் ஸ்டார்ட்ஸ்!

04:45 PM: இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என கேப்டன் ரோஹித் அறிவித்துள்ளார்.

04:30 PM: பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ரஸ் அஹ்மது டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். பாகிஸ்தானில் ஹாரிஸ்க்கு பதிலாக ஷாதாப்பும், உஸ்மான் ஷன்வாரிக்கு பதிலாக முகமது ஆமிர் சேர்க்கப்பட்டுள்ளார்.

3:40 PM: இந்திய வீரர்கள் பாகிஸ்தானை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். இதற்காக வீரர்கள் போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு வந்து சேர்ந்தனர்.

3:00  PM: கடந்த போட்டியைப் போல பிரதானமான 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்குமா? அல்லது, பாகிஸ்தான் இடது கை பேட்ஸ்மேன்களை கணக்கில் கொண்டு கூடுதலாக ஒரு இடக்கை பந்து வீச்சாளரை சேர்க்குமா? என்கிற விவாதம் எழுந்திருக்கிறது.

அப்படியொடு தேவை ஏற்பட்டால் சாஹல் அல்லது குல்தீப்பை தூக்கிவிட்டு வேகப்பந்து வீச்சாளர் கலீல் களம் இறக்கப்படலாம். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தனது உத்தேச தேர்வில் குல்தீப் யாதவுக்கு பதிலாக கலீலை சேர்க்க பரிந்துரை செய்திருக்கிறார்.

12:30 PM: இந்திய அணியில் காயம் காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்ட்யா இடத்தில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா, வங்கதேசத்திற்கு எதிராக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

மேலும் படிக்க: ரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் அணியில் இடம் உறுதி!

இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இன்றைய போட்டியிலும் அவருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

பேட்டிங்கை பொறுத்தவரை, தவான், ரோஹித், ராயுடு, தோனி நம்பிக்கை அளிக்கிறர்கள். ஒருவேளை இவர்கள் நால்வரும் அடுத்தடுத்து அவுட்டாகும் பட்சத்தில்... அதாவது, 50-4 என்று வைத்துக் கொள்ளுங்களேன்... அப்படி நடக்கும் பட்சத்தில் இந்தியாவின் மிடில் ஆர்டர் அணியை தாங்கிப் பிடிக்குமா? என்பது தான் பெரிய கேள்வியாக உள்ளது.

பவுலிங்கில் பும்ரா, புவனேஷ், சாஹல், குல்தீப், ஜடேஜா என பலமாகவே காணப்படுகிறது இந்தியா.

பாகிஸ்தானை பொறுத்தவரை, சீம் பவுலிங் தான் அவர்களது பெரிய பலம். முன்னர் நாம் சொன்னது போல, இந்திய பேட்ஸ்மேன்களும் கொஞ்சம் அசந்தாலும் 50-4 என்ற நிலை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை ஐஇதமிழ்-ல் நீங்கள் உடனுக்குடன் காணலாம்.

மேலும் படிக்க - India vs Pakistan Live Cricket Streaming: மேட்ச் எங்கு, எப்போது தொடங்குகிறது?

India Vs Pakistan Asia Cup 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment