Advertisment

Ind vs Pak Women’s Asia Cup T20 2024 : பவுலிங், பேட்டிங்கில் கலக்கிய இந்திய அணி; 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி!

India vs Pakistan Women’s Asia Cup T20 2024 Updates: ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் டி20 போட்டி தொடரில், இலங்கையில் தம்புல்லாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ind vs pak women

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் டி20 போட்டி தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

India vs Pakistan Women’s Asia Cup T20 2024 Updates: ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் டி20 போட்டி தொடரில், இலங்கையில் தம்புல்லாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: India vs Pakistan Women’s Asia Cup T20 2024 Live Score: IND 84/0 (109 to win) vs PAK in Dambulla

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் டி20 போட்டி இலங்கையில் தம்புல்லாவில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) தொடங்கியது. மகளிர் ஆசியக் கோப்பை போட்டி ஜூலை 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் இடம்பெற்றுள்ளன. 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடரில், முதல் லீக் ஆட்டத்தில் நேபாளம் - ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.) அணிகள் மோதின. இதில் நேபாளம் வெற்றி பெற்றது.

இதையடுத்து, மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடரில் 2-வது ஆட்டத்தில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியும் நிடா டார் தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் அணியும் இலங்கையில் தம்புல்லாவில் உள்ள ரங்கிரி தம்புல்லா சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிக்கிழமை மோதியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் நிடா டார் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குல் ஃபெரோசா, முபீனா அலி களமிறங்கினர். 

பாகிஸ்தான் அணி 1.4 ஓவரில்  9 ரன்கள் எடுத்திருந்த போது 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த குல் ஃபெரோசா, பூஜா வஸ்த்ராகர் வீசிய பந்தில் ஹர்பிரீத் கவுர் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, சிட்ரா அமீன் பேட்டிங் செய்ய வந்தார்.

பாகிஸ்தான் அணி 1.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்திருந்தபோது, 11 பந்துகளில் 11 ரன்கள் அடித்திருந்த முபீனா அலி பூஜா வஸ்த்ராகர் வீசிய பந்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, ஆலியா ரியாஸ் பேட்டிங் செய்ய  வந்தார். 

பாகிஸ்தான் அணி 7.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்தபோது, 11 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஆலியா ரியாஸ், ஷ்ரேயங்கா பாட்டில் வீசிய பந்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, கேப்டன் நிடா டார் பேட்டிங் செய்ய வந்தார்.

நிடா டார் 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். 

நிதானமாக விளையாடிய சிட்ரா அமீனும் 25 ரன்களில் அவுட் ஆனார். இந்திய வீராங்கணைகளின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் வீராங்கணைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வெளியேறினார்கள்.

இறுதியில் பாகிஸ்தான் அணி  19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்தது

இந்திய மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷஃபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி, பாகிஸ்தான் வீராங்கணைகள் வீசிய பந்தை பவுண்டரிகளுக்கு விரட்டி அடித்தனர்.

இந்த ஜோடியைப் பிரிக்க பாகிஸ்தான் அணி போராட வேண்டியிருந்தது. இந்திய அணி 9.3 ஓவர்களில் 85 ரன்ன்கள் எடுத்திருந்தபொது, 45 ரன்கள் அடித்திருந்த மந்தனா சைடா அரூப் ஷா வீசிய பந்தில் ஆலியா ரியாஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து தயாளன் ஹேமலதா பேட்டிங் செய்ய வந்தார்.

அடுத்து, ஷஃபாலி வர்மா 29 பந்துகளில் 40 ரன்கள் அடித்திருந்த நிலையில், சைடா அரூப் ஷா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, கேப்டன் ஹர்பிரீத் சிங் பேட்டிங் செய்ய வந்தார்.

இறுதியில் இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Vs Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment