Advertisment

IND vs PAK, Asia Cup 2023 Score: குல்தீப் அபார பந்துவீச்சு; 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

கோலி, ராகுல் அதிரடி சதத்தால் 356 ரன்கள் குவித்த இந்தியா; 128 ரன்களுக்குள் சுருண்ட பாகிஸ்தான்; குல்தீப் அபார பந்துவீச்சால் 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி

author-image
WebDesk
New Update
India vs Pakistan, Asia Cup 2023 - KOHLI AND KL RAHUL

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: - இந்தியா - பாகிஸ்தான்

Asia Cup 2023, India vs Pakistan Live Score Updates: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானில் ஒதுக்கப்பட்ட லீக் போட்டிகள் முடிந்து விட்டன. லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளன. 

Advertisment

சூப்பர்4 சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி இலங்கையில் நடக்கிறது. இந்த சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில், சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் 3-வது ஆட்டத்தில் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியானது இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. 

ஆங்கிலத்தில் படிக்க: India vs Pakistan Asia Cup 2023 Live Score

டாஸ் வென்ற பாக்,. பவுலிங்; இந்தியா முதலில் பேட்டிங்

இந்த ஆட்டத்தில் டாஸ் பாகிஸ்தான் அணி பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதனால், இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி முதல் ஓவர் முதலே அடித்து ஆட ஆரம்பித்தனர். இந்த ஜோடியில் கில் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேப்டன் ரோகித் 40 பந்துகளில்  அரைசதம் விளாசினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் கேப்டன் ரோகித் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோகித் 49பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 

இதேபோல், சிறப்பாக விளையாடி வந்த கில் 58 ரன்கள் (52 பந்துகள் 10 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் அவுட் ஆனார். தற்போது கோலி - கே.எல் ராகுல் ஜோடி களத்தில்  உள்ளனர்.

இந்த நிலையில் ஆட்டத்தின் இடையே தற்போது மழை குறுக்கிட்டுள்ளது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கன மழையாக அதிகரித்ததால் ஊழியர்கள் மைதானம் முழுவதையும் தார்பாய் கொண்டு மூடினர். பின் கள நடுவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்தபோது மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி நேற்று ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் இன்று (ரிசர்வ் டே) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் உள்ளனர். 

மீண்டும் மழை -  ரிசர்வ் டே போட்டி தொடங்குவதில் தாமதம்: பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் வெற்றி இலக்கு 

இன்று மாலை 3 மணிக்கு ஆட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றும் அங்கு மழை பெய்வதன் காரணமாக இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், போட்டி மீண்டும் தொடங்கியது. களத்தில் இருந்த கோலி - ராகுல் ஜோடி அசத்தலாக விளையாடினர். இருவரும் அரைசதம் கடந்து மிரட்டினர். 40 ஓவர்களுக்குப் பிறகு அதிரடியை வெளிப்படுத்திய இந்திய ஜோடியில் ராகுல் 100 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து, கோலி 84 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ராகுலுக்கு இது 6வது ஒருநாள் போட்டி சதமாகும். அதேவேளையில், கோலிக்கு இது 47வது ஒருநாள் போட்டி சதமாகும். 

ஃபஹீம் அஷ்ரப் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தை கோலி சிக்ஸர் பறக்க விட இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன்னுடனும், ராகுல் 111 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.  பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் மற்றும் ஷஹீன் அப்ரிடி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பாகிஸ்தான் அணிக்கு 357 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

பாகிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபஹார் ஜமாம் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். இமாம் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பாபர் அசம் 10 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக ஜமாம் மற்றும் ரிஸ்வான் விளையாடி வந்த நிலையில், மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது. பின்னர் மழை நின்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ரிஸ்வான் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஜமாம் 27 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய சல்மான் மற்றும் இப்திகார் தலா 23 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்.

அடுத்து களமிறங்கிய ஷதாப் கான் 6 ரன்களிலும், அஷ்ரப் 4 ரன்களிலும் அவுட் ஆகினார். ஷாகின் அப்ரிதி 7 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், காயம் காரணமாக நசீம் மற்றும் ஹரிஸ் களமிறங்காததால் இந்திய அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். பும்ரா, பாண்டியா, ஷர்துல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:

இந்தியா: 

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ். 

பாகிஸ்தான்: 

ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவ்ஃப். 

நேருக்கு நேர் 

ஒருநாள் போட்டியை பொறுத்த வரையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 133 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 55-ல் இந்தியாவும், 73-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. 5 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 14 முறை சந்தித்ததில் 7-ல் இந்தியாவும், 5-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. 2 ஆட்டம் முடிவில்லாமல் போனது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment