Sports - IND vs PAK Weather update Asia Cup 2023 Tamil News: 6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் போட்டிகள் நடந்து முடிந்தது. இன்று முதல் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடக்கிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.10) நடக்கும் 3வது சூப்பர் 4 சுற்று போட்டியில் பரம போட்டியாளர்களாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியானது கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியின் போதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று ஆர் பிரேமதாச ஸ்டேடியத்தில் முழு போட்டி நடைபெறுவதற்கு சாதகமற்ற சூழ்நிலையே உள்ளது. ஏனெனில் காலையில் மழை பெய்யும் வாய்ப்பு 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். நாள் முன்னேறும்போது வெப்பநிலை சிறிது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் மழை அச்சுறுத்தல் நீடிக்கிறது. குறிப்பாக ஆட்டத்தின் ஆரம்ப கட்டத்திலே மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
தெளிவான வானத்தின் அறிகுறிகள் இல்லாமல் மாலையில் வெப்பநிலை மேலும் பல டிகிரி குறையும். உண்மையில், இரவு நேரத்தில் மழை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மட்டுமல்ல, இந்தியாவின் அடுத்த இரண்டு சூப்பர் ஃபோர் போட்டிகள் - இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் போதும் மோசமான வானிலையால் குறுக்கிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டெம்பர் 12ஆம் திகதி இதே மைதானத்தில் இந்தியா அணி இலங்கையை எதிர்கொள்வார்கள். வானிலை முன்னறிவிப்பின்படி, மேக மூட்டத்துடன் மழை பெய்யும் வாய்ப்பு 40 வீதமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - இலங்கை போட்டிக்கு முன்னதாக, செப்டம்பர் 11 அன்று கொழும்பில் பலத்த மழை பெய்யும் என்பது கவனிக்கத்தக்கது.
எவ்வாறாயினும், செப்டம்பர் 15 ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான இந்தியாவின் கடைசி சூப்பர் 4 போட்டியின் போது, முந்தைய நாட்களை விட மழைப்பொழிவு மற்றும் மேகக்கூட்டத்தின் சதவீதம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முழு போட்டியை காணும் வாய்ப்பு கிடைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“