T20 World Cup 2024 | India Vs Pakistan: 20 அணிகள் பங்கேற்கும் 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த தொடரில் ஜூன் 9 ஆம் தேதி அன்று நியூயார்க்கின் புறநகர் பகுதியில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் டிக்கெட்டுகள் தான் விரைவில் விற்றுத் தீர்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான், இலங்கை மற்றும் கனடா ஆகிய மற்ற போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் மெதுவாகவே விற்றுக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான டாலர்களுக்கு விற்கப்படும் அனைத்தையும் உள்ளடக்கிய பயணப் பேக்கேஜ்களுக்கான டிக்கெட்டுகளில் ஹோட்டல் தங்குமிடங்கள், போக்குவரத்து மற்றும் விருப்பமான இருக்கைகள் ஆகியவை அடங்கும்.
தவிர, பலரும் StubHub போன்ற இணைய தளங்களில் ஆன்லைனில் டிக்கெட் வாங்கி வருகிறார்கள். ஆன்லைனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் 1,400 அமெரிக்க டாலர் முதல் 70,000 அமெரிக்க டாலர் வரை விற்கப்படுகின்றன. அதே நேரத்தில் இலங்கை vs ஸ்காட்லாந்து அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் 35 அமெரிக்க டாலரில் தொடங்கி விற்பனையாகி வருகிறது.
நியூயார்க்கில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் 34,000 இருக்கைகள் கொண்ட கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிட்டுப்பட்டு உள்ளது. இதுதான் அமெரிக்காவில் முதன்முறையாக அமைக்கப்பட்ட டி20 உலகக் கோப்பைக்கான மைதானம் என்பது குறிபிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“