scorecardresearch

செக்ஸ் வச்சுக்கோங்க… பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு இந்திய வீரர்களுக்கு மருத்துவர் அறிவுரை

செக்ஸ் சக்தியை அதிகரிக்கும், எனவே வீரர்கள் அதை முயற்சிக்க வேண்டும்; டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் போட்டிகளுக்கு முன்னதாக மருத்துவர் அறிவுரை

செக்ஸ் வச்சுக்கோங்க… பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு இந்திய வீரர்களுக்கு மருத்துவர் அறிவுரை
Indian cricket team

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ள நிலையில், போட்டிக்கு முன்னதாக செக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள் என இந்திய வீரர்களுக்கு மருத்துவர் ஒருவர் அறிவுரை வழங்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாகச் சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தியா- பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே எப்போதும் பரபரப்பு, விறுவிறுப்புதான். அதுவும் இரு நாடுகளுக்கு இடையே நேரடி போட்டிகள் இல்லாத நிலையில், உலகக் கோப்பை, ஆசியக்கோப்பை போன்ற தொடர்களில் தான் இரு அணிகளும் சந்தித்து கொள்கின்றன. எனவே போட்டியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: IND vs PAK Live Streaming: இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

இந்தியா- பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால், வீரர்கள் கடுமையான அழுத்தத்தில் விளையாடுகிறார்கள். முதலாவதாக, இது உலகக் கோப்பை ஆட்டம் மற்றும் இரண்டாவதாக, அவர்களின் பரம எதிரிகளுக்கு எதிரானது. பாகிஸ்தானிடம் தோற்றால் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். வீரர்கள் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வறுத்தெடுக்கப்படுகிறார்கள். அதேநேரம், வீரர்களும் தங்களை மேட்ச் வின்னர்கள் என்பதை நிரூபிக்க விரும்புகிறார்கள்.

முக்கியமான போட்டிகளுக்கு முன்னதாக வீரர்கள் தங்கள் மன அழுத்தத்தை முறியடிக்க ஒரு தனித்துவமான வழியை இந்திய பாலியல் வல்லுநர் ஒருவர் அறிவுறுத்தியுள்ளார். போட்டிக்கு முன் உடலுறவு கொள்ளுமாறு அனைத்து வீரர்களுக்கும் அவர் அறிவுறுத்துகிறார், ஏனெனில் அதன் மூலம் ரிலாக்ஸ் ஆக முடிகிறது, என்று அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக, இந்திய செக்ஸாலஜிஸ்ட் பிரகாஷ் கோத்தாரி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் ஒரு சுற்று உடலுறவுக்குப் பிறகு உயர்கிறது என்று டாக்டர் பிராஷ் கோத்தாரி கூறுகிறார். மேலும், “திருப்திகரமான உடலுறவு வீரர்கள் செயல்திறனில் நல்ல முடிவுகளை அடைய உதவும். இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனது மறைந்த நண்பர், உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாலியல் வல்லுனர் வார்டெல் பொமராய், தங்கள் துணைகளுடன் உடலுறவை அனுபவித்த பிறகு தங்கப் பதக்கங்களை வென்ற சில விளையாட்டு வீரர்களுடனான தனது நேர்காணலின் அடிப்படையில் இதை என்னிடம் கூறினார். செக்ஸ் சக்தியை அதிகரிக்கும், எனவே வீரர்கள் அதை முயற்சிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலுக்கு முன்னதாக வெளியாகி உள்ள இந்த செக்ஸ் தொடர்பான அறிவுரை வைரலாகி வருகிறது. இருப்பினும், சில மருத்துவ நிபுணர்கள், இந்த துறையில் எந்த ஆய்வும் செய்யப்படவில்லை.. உடலுறவுக்குப் பிறகு விளையாட்டுகளில் செயல்திறன் இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை, என்று கூறுகின்றனர்.

தற்போதைய இந்திய மனநல பயிற்சியாளர் பேடி அப்டன், 2011 உலகக் கோப்பையில் போட்டிகளுக்கு முன் இந்திய வீரர்களை உடலுறவு கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக 2019 இல் வெளிவந்த தனது தி பேர்ஃபுட் கோச் புத்தகத்தில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: India vs pakistan t20 world cup doctor advises to players try sex before match goes viral