T20 World Cup 2024 | India Vs Pakistan: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அரங்கேறும் 19-வது லீக் ஆட்டத்தில் ஏ-பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தப் போட்டியை ஒட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது. மறுபுறம், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டது. இந்தத் தோல்வியில் இருந்து மீண்டு இந்தியாவுக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்ய முயலும். அதேநேரம், பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தவே இந்தியா நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
அதிர்ச்சியளிக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி டிக்கெட் விலை
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் டிக்கெட் விலை இந்திய மதிப்பில் சுமார் 1.46 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள 252-வது பிரிவின் 20-வது வரிசையில் இருக்கும் 30 எண் கொண்ட சீட்டின் விலை 1,75,400 அமெரிக்க டாலர் (ரூ. 1.46 கோடி) என மறுவிற்பனை சந்தையான ஸ்டபுப்-பில் (Stubhub) பட்டியலிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளை மார்க்கெட்டுக்கு ஏற்ப சட்டப்பூர்வமாக விற்கலாம் என்கிற சூழல் இருக்கும் நிலையில், குறிப்பிட்ட சீட்களின் விலை மட்டும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரிவு 252 இல் அருகிலுள்ள வரிசைகளில் டிக்கெட்டுகள் மிகக் குறைவாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. வரிசை 21 இல் உள்ள சீட்களின் விலை 693 அமெரிக்க டாலராகவும் மற்றும் வரிசை 19 இல் உள்ள சீட்களின் விலை 801 டாலராகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அந்தப் பிரிவில் உள்ள சீட்களுக்கான டிக்கெட், சீட் அல்லது வரிசை எண்ணை வெளியிடாமல், மற்றொரு மறுவிற்பனை தளமான வயாகோகோ-வில் (Viagogo), அதே விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரப்பூர்வ தளத்தில் மார்க்கெட்டுக்கு ஏற்ப இல்லாமல் சில டிக்கெட்டுகள் இன்னும் கிடைக்கின்றன, மேலும் பவுண்டரி கிளப் பிரிவில் 1,500 டாலர் முதல் டயமண்ட் கிளப் பிரிவில் 10,000 டாலர் வரை விலை நிர்ணயிக்கப்பட்டது என்றும், அவற்றுக்கிடையே கார்னர் கிளப் பிரிவுக்கான பிரீமியம் கிளப் லவுஞ்ச் பிரிவு டிக்கெட்டுகள் 2,750 டாலர் மற்றும் கபனாஸ் பிரிவுக்கு 3,000 டாலர் என்றும் தெரிவித்துள்ளது.
போட்டிகளுக்கு இடையே விலை மற்றும் தேவை ஆகியவற்றில் அப்பட்டமான வேறுபாடுகள் உள்ளன, அதே மைதானத்தில் நாளை சனிக்கிழமை நடக்கவிருக்கும் நெதர்லாந்து -தென் ஆப்பிரிக்கா போட்டிக்கு ஐசிசி தளத்தில் பிரீமியத்திற்கு 120 டாலர் மற்றும் பிரீமியம் கிளப் பிரிவுகளுக்கு 700 டாலர் வரை டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.
மேலும், வருகிற புதன்கிழமை நடைபெறவிருக்கும் இந்தியா-அமெரிக்க போட்டிக்கான டிக்கெட்டுகள் பிரீமியத்திற்கு 300 டாலர், பிரீமியம் கிளப் லவுஞ்சிற்கு 1,000 டாலர், கபனாஸ் 1,350 டாலர் மற்றும் டயமண்ட் கிளப் டிக்கெட் விலை 7,500 டாலர் என பட்டியலிடப்பட்டுள்ளது. 34,000 பேர் கொண்ட மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி டிக்கெட்டுகளுக்கான தேவை 200 மடங்கு அதிகமாக இருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
ஸ்டபுப், வயாகோகோ மற்றும் அத்தகைய தளங்கள், டிக்கெட்டின் மதிப்பின் அடிப்படையில் விற்பனையாளர் மற்றும் வாங்குபவருக்கு கட்டணம் வசூலிக்கும் மற்றும் பரிவர்த்தனைக்கு உத்தரவாதம் அளிக்கும் இடைத்தரகர்களாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு டிக்கெட்டுக்கான 175,400 டாலர் தேவையின் மிகைப்படுத்தல் இருந்தபோதிலும், இரண்டாம் நிலை சந்தைகளில் கேட்கும் விலைகள் பெரும்பாலும் 700 டாலர் மற்றும் 1,000 டாலர் வரை இருந்தது.
ஸ்டபுப்-பில் இரண்டாவது விலையுயர்ந்த பட்டியல் பிரிவு 101 இல் 18,000 டாலர் ஆகும். அதைத் தொடர்ந்து டயமண்ட் பிரிவில் 13, 496 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதில் இலவச வி.ஐ.பி பார்க்கிங் மற்றும் "வரம்பற்ற உணவு மற்றும் பானங்கள் (பீர், ஒயின் மற்றும் மதுபானங்கள்)" போன்ற சலுகைகள் உள்ளடங்கியதாக பட்டியலிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
டயமண்ட் கிளப் சீட்டுக்கு வயகோகோ 6,700 டாலர் என பட்டியலிட்டது. அதில் உள்ள பெரும்பாலான டிக்கெட்டுகளின் விலை 500 டாலர்கள் மற்றும் குறைந்த 700 டாலர்கள் வரை இருந்தது. விவிட்சீட்சில் (Vividseats) டிக்கெட்டின் அதிகபட்ச விலை 8,013 டாலர் மற்றும் குறைந்தபட்ச விலை 693 டாலர் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.