Asia Cup 2022: India vs Pakistan Tamil News: 15 - வது ஆசிய கோப்பை போட்டிகள் வருகிற 27ம் முதல் தொடங்குகிறது. இதில் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில், இந்தியா கிரிக்கெட்டில் தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் கடைசியாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நேருக்கு நேர் சந்தித்தன. அந்த ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது டி20 சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கண்ட இரண்டாவது தோல்வியாகும்.
ஆசியக் கோப்பை தொடருக்கான போட்டிகள் இலங்கை மண்ணில் நடைபெற இருந்த நிலையில், அங்கு நிகழ்ந்து வரும் பதற்றமான சூழலால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடப்பட இருக்கிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை, இந்த மைதானம் அந்த அணிக்கு சொந்த நட்டு மைதானம் போன்றதாகும். ஏன்னென்றால், பாகிஸ்தான் அணியினர் இங்குள்ள மைதானங்களில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடருக்கான போட்டிகளை விளையாடியுள்ளனர். இதனால், அவர்களுக்கு மைதாங்களின் அடிநாதம் அனைத்தும் அத்துப்பிடி.
இந்தியா vs பாகிஸ்தான்: முந்தைய சந்திப்பு
கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 57 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி, 17.5 வது ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்தது. மேலும் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பாபர் அசாம் (79) மற்றும் முகமது ரிஸ்வான் (68) ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து 152 ரன்களை குவித்தனர். அதோடு 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்தனர். இந்த ஆட்டம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றுவரை பெரும் இடியாக இருந்து வருகிறது. மேலும், இந்திய அணி டி20 அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனது பெரும் ஏமாற்றத்தையும் கொடுத்தது.
இந்தியா vs பாகிஸ்தான்: நேருக்கு நேர்
ஒட்டுமொத்தமாக, இந்தியாவும் பாகிஸ்தானும் மொத்தம் 200 முறை விளையாடி, ஒருவருக்கொருவர் மோசமான ஏமாற்றங்களை கொடுத்துள்ளனர். ஆனால், டி20 போட்டிகளில் இந்தியா 9 முறையும், பாகிஸ்தான் 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியா vs பாகிஸ்தான்: யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
நடைமுறையில் கிரிக்கெட் கணிக்க முடியாத விளையாட்டாக இருந்தாலும், டி20 ஃபார்மெட்டில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடி இல்லாதது பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக இருக்கும். இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் தற்போதையை சிறப்பான ஃபார்ம் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கும்.
இந்திய ரசிகர்களுக்கு விருப்பமான அணியாக இல்லாவிட்டாலும், டி20 ஃபார்மெட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஃபகார் ஜமான் என தரமான மற்றும் ஆபத்தான பேட்டிங் வரிசையையும் அந்த அணி கொண்டுள்ளது.
2022 ஆசிய கோப்பைக்கான இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
ஆசிய கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியை ரோகித் ஷர்மா வழிநடத்துகிறார். அவருக்கு உறுதுணையாக கேஎல் ராகுல் துணை கேப்டனாக உள்ளார். மறுபுறம், நட்சத்திர பந்துவீச்சாளர்களான ஹரிஸ் ரவுஃப் மற்றும் ஷதாப் கான் ஆகியோருடன் பாகிஸ்தானும் மற்றொரு வலுவான போட்டியாளராக உள்ளது.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.
பாகிஸ்தான்:
பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான், ஃபக்கர் ஜமான், ஹைதர் அலி, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவூப், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர், மொஹின் காதிர்,
இந்தியா vs பாகிஸ்தான்: கவனிக்க வேண்டிய வீரர்கள் பட்டியல்
ரவீந்திர ஜடேஜா (இந்தியா):
இந்திய ஆல்ரவுண்டர் வீரரான ரவீந்திர ஜடேஜா எப்போதும் நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த நம்பிக்கைக்குரிய வீரராக இருந்து வருகிறார். அவரது சுழல் பந்துவீச்சு மற்றும் கேமியோ பேட்டிங் திறமையால், அவர் எந்தவொரு எதிரணிக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருக்க முடியும்.
முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்):
கடந்த டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்திய ரசிகர்களுக்கு 'நைட்மேர்' எனும் மிகவும் விரும்பத்தகாத அல்லது பயமுறுத்தும் அனுபவத்தை கொடுத்தவர் ரிஸ்வான். ஏற்கனவே இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர் இம்முறையும் அதற்கு கங்கணம் கட்டிக்கொண்டுள்ளார்.
விராட் கோலி (இந்தியா):
பாகிஸ்தான் அணி எப்போதும் கோலியின் விருப்பமான எதிரணிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான அவரது பேட்டிங் சராசரி 77.75 ஆகும். இதுவே ஒரு வீரரின் அதிகபட்சமும் ஆகும்
பாபர் அசாம் (பாகிஸ்தான்):
பாகிஸ்தானின் சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக பாபர் அசாம் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 27 வயதான அவர் உலக கிரிக்கெட் அரங்கில் பல அசத்தலான பதிவுகளை பதிவு செய்து வியக்க வைத்திருக்கிறார்.
ரிஷப் பண்ட் (இந்தியா):
இந்தியா உருவாக்கிய சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ரிஷப் பண்ட் ஒருவராக இருந்து வருகிறார். டெஸ்ட் தொடர்களில் அவர் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். தவிர, தனது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களை குஷிப்படுத்தும் வீரராகவும் இருந்து வருகிறார்.
முகமது ஹஸ்னைன் (பாகிஸ்தான்):
பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அப்ரிடிக்கு பதிலாக முகமது ஹஸ்னைன் சேர்க்கப்பட்டுள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் பிக் பாஷ் லீக்கில் பயங்கர ஃபார்மில் இருந்தார். மேலும் இந்தியா போன்ற ஹெவிவெயிட்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.