Pakistan vs India vs World Cup 2019 Live Score: உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை ஒருபோதும் பாகிஸ்தான் அணி வென்றது கிடையாது என்கிற சரித்திரம் மீண்டும் நிஜமாகியது. பாகிஸ்தானை 7-வது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் வென்று சரித்திரம் படைத்தது இந்திய கிரிக்கெட் அணி. ரோகித் சர்மாவின் அபார சதமும், இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ஹர்திக் ஆகியோரின் பந்து வீச்சும் இதற்கு கை கொடுத்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று(ஜூன்.16) மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்ஃபரஸ் அஹ்மது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதின.
ஏற்கனவே மூன்று போட்டிகளில் களம் கண்டுள்ள இந்திய அணி, இரண்டில் வெற்றிப் பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
பாகிஸ்தான் இதற்கு முன்பு 4 போட்டிகளில் ஆடி, இரண்டு தோல்வியும், ஒரு வெற்றியும் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 3 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.
இந்திய அணி முதலில் பேட் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா அபாரமாக ஆடி, சதம் அடித்தார். பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் சிறப்பாக பேட் செய்தாலும், மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர் ஆகியோர் பந்து வீச்சில் சரிந்தது.
இடையில் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால், 40 ஓவர்களில் 320 ரன்கள் என பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் மழைக்கு முன்பாகவே 6 விக்கெட்டுகளை பறி கொடுத்த பாகிஸ்தான், அதில் இருந்து மீள முடியவில்லை. 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
புவனேஷ்வர் குமார் தசைப் பிடிப்பு காரணமாக பாதியில் வெளியேற நேர்ந்தாலும் இந்திய பவுலர்கள் அபாரமாக ஆடி வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பான இந்தப் போட்டியின் ஹைலைட் நிகழ்வுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ்களுடன் காணலாம்.
Live Blog
World Cup 2019 : India vs Pakistan Live Score, IND vs PAK 2019 Match Highlights – ட்ரஃபோர்ட் மைதானத்தில் அசத்திய இந்தியா.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 131 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில், இந்தியா 54 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 73 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. 4 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதிய 6 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றிபெற்றுள்ளது. உலகக் கோப்பையில் இரு அணிகளும், 1975, 79, 1983, 87 மற்றும் 2007 ஆகிய தொடர்களில் சந்திக்கவில்லை.
40 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து, 212 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இமாத் வாசிம் 46 ரன்களுடனும், சதாப் கான் 20 ரன்களுடனும் களத்தில் நின்றனர். இதனால் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் தோல்வியை சந்திக்காத அணியாக பயணத்தை தொடர்கிறது.
உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்கிற வரலாறையும் இந்திய அணி தொடர்கிறது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை 140 ரன்கள் குவித்த ரோகித் சர்மா பெற்றார்.
மழை காரணமாக 40 ஓவர்களில் 302 ரன்கள் என பாகிஸ்தானுக்கு டார்கெட் நிர்ணயிக்கப்பட்டது. 37 ஓவர்களில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்திருக்கிறது. அடுத்த 3 ஓவர்களில் அந்த அணிக்கு 120 ரன்கள் தேவை. அதாவது ஓவருக்கு 40 ரன்கள்! எனவே இந்தியாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 11.40-க்கு தள்ளி வைக்கப்பட்டது. டி.ஆர்.எஸ். முறைப்படி 40 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. அதன்படி 5 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 136 ரன்கள் தேவை!
தூறல் முழுமையாக நிற்கவில்லை. ஆட்டம் தொடங்குவது குறித்தும் உறுதியான தகவல் இல்லை. இந்திய அணி கேப்டன் கோலி, பால்கனியில் கோலா பாட்டிலை வைத்து விளையாடியபடி நிற்கிறார். சக வீரர்களும் அங்கு நிற்கிறார்கள். பாகிஸ்தான் வீரர்களை பார்க்க முடியவில்லை.
போட்டி இத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டால், டி.ஆர்.எஸ். முறைப்படி இந்தியா வென்றதாக அறிவிக்கப்படும். எனினும் சில ஓவர்கள் ஆட்டம் இன்னும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி.ஆர்.எஸ். முறைப்படி பார்த்தால் 35 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 252 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். அதைவிட 86 ரன்கள் குறைவாகவே எடுத்திருக்கிறது. எனவே இந்திய ரசிகர்கள் பதற்றப்பட ஒன்றுமில்லை. மழையால் ஆட்டம் இத்துடன் நிறுத்தப்பட்டாலும், வெற்றி இந்தியாவுக்கே!
பாகிஸ்தானைப் பொறுத்தவரை ரன் ரேட்டை அதிகரிக்க 50 ஓவர்கள் விளையாட வேண்டியது அவசியம்! எனவே மழை நிற்காவிட்டால், இழப்பு பாகிஸ்தானுக்கே!
35 ஓவர்களில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இமாத் வாசிம் 22 ரன்களுடனும், ஷதாப் கான் 1 ரன்னுடனும் களத்தில் இருக்கிறார்கள்.
35-வது ஓவரின் முதல் பந்திலேயே பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிராஸை கிளீன் போல்ட் ஆக்கினார் தமிழக வீரர் விஜய் சங்கர். அப்போது பாகிஸ்தான் ஸ்கோர் 165 ரன்கள் மட்டுமே. இதனால் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கிறது பாகிஸ்தான்.
7-வது விக்கெட்டுக்கு ஷதாப் கான் களம் இறங்கி, இமாத் வாசிமுடன் கை கோர்த்திருக்கிறார்.
34 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்திருக்கிறது. கேப்டன் சர்பிராஸ் (12 ரன்கள்), இமாத் வாசிம் (22 ரன்கள்) ஆகியோர் 6-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் பில்டப் செய்து வருகிறார்கள். விஜய் சங்கரும், பும்ராவும் அட்டாக் செய்கிறார்கள். பாகிஸ்தான் வெற்றி பெற 172 ரன்கள், சராசரியாக ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தேவை.
புவனேஷ்வர் பந்து வீச முடியாத நிலையில், குல்தீப், ஹர்திக் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தை இந்தியா பக்கம் நகர்த்தியிருக்கிறார்கள். இப்போதைய சூழலில் மழையால் ஆட்டம் பாதித்து டி.ஆர்.எஸ். அமல் ஆனாலும் வெற்றி இந்தியாவுக்கே!
அருமையான பார்ட்னர்ஷிப் கொடுத்து மிரட்டிக் கொண்டிருந்த ஃபகர் சமான் (62 ரன்கள்), பாபர் அஸாம் (48 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்தில் விழ்ந்ததால், ஆட்டம் இந்தியா பக்கம் சாய்ந்தது.
அடுத்து ஆபத்தான வீரர்களான முகம்மது ஹபீஸ் (9 ரன்கள்), சோயிப் மாலிக் (0 ரன்) ஆகியோரை அடுத்தடுத்து ஹர்திக் பாண்ட்யா வெளியேற்ற, இந்தியா ஆட்டத்தை தனது ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. 31 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்திருக்கிறது. கைவசம் 5 விக்கெட்டுகள் 19 ஓவர்கள் உள்ள நிலையில் வெற்றிக்கு 191 ரன்கள் தேவை.
ஆல் ரவுண்ட்ர் ஹர்திக் பாண்ட்யா அனல் பறக்கும் வேகத்தில் களம் இறங்கியுள்ளார். ஒரே ஓவரில் 2 விக்கெட்ட்க்களை வீழ்த்தி பாகிஸ்தான் வீரர்களை கலங்கடித்தார்.
குல்தீப் அடுத்த ஓவரிலேயே மற்றொரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் பாகிஸ்தானுக்கு அடுத்த விக்கெட்டை வீழ்த்தி கொடுத்தார் குல்தீப் யாதவ்.
21 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 102 ரன்களை எடுத்துள்ளது. இதுவரை 1 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது.
குல்தீப் யாதவ் வீசிய பந்தில் விக்கெட் எதிர்பார்த்த நிலையில் கடைசியில் அது மிஸ்னாது. இந்திய ரசிகர்கள் சோகமடைந்தனர்.
பாகிஸ்தான் அணி சதத்தை நெருங்கி வருகிறது.
ஃபகருக்கு அடுத்த பவ்ண்ட்ரி கொடுத்த ஹர்திக் பாண்ட்யா.
ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தில் பாகிஸ்தான் வீரர், ஃபகர் பவுண்ட்ரி வீசினார்.
பாகிஸ்தான் 56 ரன்களை எடுத்திருக்கும் நிலையில், இந்திய அணி விக்கெட் எடுக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.
8 ஆவது ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 3 ரன்களை எடுத்து ஆடி வருகிறது
ஷிகர் தவானுக்கு பதிலாக இன்றைய ஆட்டத்தில் இணைந்த தமிழக வீரர் விஜய் சங்கர் பாகிஸ்தானுக்கு முதல் விக்கெட்டை அளித்தார்.
புவனேஸ்வர் குமார் வீசிய அடுத்த பந்தில் பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது பவுண்ட்ரி.
2 ஆவது ஓவரை வீசிய பும்ரா பாகிஸ்தானுக்கு முதல் பவுண்டிரியை அளித்தார்.
பாகிஸ்தான்பந் அணி பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் முதல் ஓவரை நிறைவு செய்தார்.
கொட்டும் மழையிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் குடையை பிடித்தப்படி போட்டியை ரசித்து வருகின்றனர்.
மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக பிட்ச் தரம் மிகவும் மோசமாகியுள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 336 ரன்களை குவித்துள்ளது. 5 விக்கெட்டுகளை இழந்தது. 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் அடுத்தாக களம் இறங்க உள்ளது பாகிஸ்தான் அணி!
77 ரன்களில் விராட் கோலி அவுட். மழையால் தடைப்பட்ட ஆட்டம் 30 நிமிடத்திற்கு பிறகு தொடங்கிய நிலையில் விராட் கோலி அவுட் ஆகியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மழையால் தடைப்பட்ட ஆட்டம் 30 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கியது.
இந்திய அணி 46.4 ஓவர்களில் 305 ரன்களை எடுத்துள்ளது. 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணியின் ஆட்டம் தற்போது மழையால் தடைப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் நகரில் தற்போது மழை பெய்து வருவதால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ட்தோனி அதிர்ச்சி அவுட். 1 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அமீர் பந்தில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.
வந்த உடனே அனல் தெறிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா அழகாக கேட்ச் கொடுத்து அவுட்டானார். அசாம் பந்தில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார் ஹர்திக் பாண்ட்யா.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதத்தை நிறைவு செய்தார் விராட் கோலி.
விராட் கோலி சதத்தை நெருங்கி வருகிறார்.
இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 140 ரன்களில் ஆட்டம் இழந்தார். 113 பந்துகளுக்கு ரோகித் 140 ரன்களை குவிந்திருந்தார். இதில் 3 சிக்ஸ்கள் மற்றும் 14 பவுண்ட்ரிகளும் அடங்கும்.
சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் ரோகித் சர்மாவுக்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
இந்திய அணி 35 ஓவர் முடிவில் 213 ரன்களை எடுத்து அபாரமாக விளையாடி வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா தனது பவுண்ட்ரிகளை விளாசி வருகிறார்.
கேப்டன் விராட் கோலி ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 26 பந்துகளில் 2 ரன்களை அடித்துள்ளார்.
இன்றைய ஆட்டத்தின் மாஸ் வீரரான ரோகித் சர்மா தனது சதத்தை நிறைவு செய்தார். 85 ரன்களில் 100 ரன்களை விளாசியுள்ளார்.
ரோகித் சர்மா சத்தை நெருங்குகிறார். 92 ரன்களை எடுத்துள்ளார்.
ராகுல்அவுட் ஆனதை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் கோலி களத்தில் இறங்கியுள்ளார்.
இந்திய அணியின் முதல் விக்கெட். வாகப் பந்தில் வீழ்ந்தார் ராகுல்.
23 ஓவர் முடிவில் இந்திய அணி 135 ரன்களை எடுத்துள்ளது பாகிஸ்தான் அணி விக்கெட் எடுக்க முடியாமல் தவித்து வருகிறது.
FIFTY!@klrahul11 joins the party, brings up a well made half-century 💪💪🇮🇳 pic.twitter.com/nS3m7kzXAy— BCCI (@BCCI) June 16, 2019தொடக்க வீரராக களம் இறங்கியுள்ள கே. எல் ராகுல் தனது அரை சதத்தை நிறைவு செய்ய உள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்களை நிறைவு செய்துள்ளது. ரோகிக்த் சர்மா 61 , ராகுல் 37 ரன்களை எடுத்துள்ளனர்.
ரோகித் சர்மா பேட்டை விளாசியதில் அடுத்த பவுண்ட்ரி. திணறும் பாகிஸ்தான் பவுலர்ஸ்.
பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய உலகக்கோப்பை ஆட்டத்தில் ரோகித் சர்மா தனது அரை சதத்தை நிறைவு செய்தார். 34 பந்தில் 5 ரன்களை குவித்துள்ள ரோகித் சர்மா இதுவரை 1 சிக்ஸ் மற்றும் 4 பவுண்ட்ரிகளை விளாசியுள்ளார்.
ரோகித் மற்றும் ராகுல் ஃபோர் மற்றும் சிக்ஸ்குகளை அரங்கத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர்.
தொடக்க வீரர்களாக களம் இறங்கியுள்ள ராகு மற்றும் ரோகித் அருமையான பாட்டனர்ஷிப்பை அமைத்துள்ளனர்.
களத்தில் இருக்கும் ரோகித் இன்றைய ஆட்டத்தில் முதல் சிக்ஸை பதிவு செய்தார்.
இந்திய அணியின் நம்பிக்கை நாயகனான ரோகித் சர்மா அடித்த அடுத்த ஃபோர்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 22 ரன்களை குவித்துள்ளது.
கே.எல் ராகுல் அடித்த ஃபோர் அரங்கத்தில் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
2 ஓவர் முடிவில் இந்திய அணி 10 ரன்களை எடுத்துள்ளது.
ஃபோர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் ரோகித். அரங்கத்தில் விசில்கள் பறந்தன.
கையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக கோப்பை போட்டிகளில் இருந்து விலகினார் ஷிகர் தவான். அவருக்கு பதிலாக அவருடைய இடத்தில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் களம் இறக்கப்பட்டுள்ளார். இரு நாட்டு அணிகளின் வீரர்கள் பட்டியல்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான போட்டியில் டாஸை வென்று பவுலிங்கை தேர்வு செய்தது பாகிஸ்தான் அணி. இன்னும் சற்று நேரத்தில் நாம் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த போட்டிகள் துவங்க உள்ளன.
இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் அச்சிடப்பட்ட முகமூடிகளை எடுத்துக் கொண்டு மைதானத்திற்குள் செல்ல முற்பட்டனர். ஆனால் பல்வேறு நடைமுறைச் சிக்கலகள் மற்றும் பாதுகாப்புப் பிரச்சனைகள் உருவாகக் கூடும் என்று அதனை எடுத்து வர வேண்டாம் என்று தடை செய்துள்ளது நிர்வாகம்.
மான்செஸ்டரில் குவியும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஆராவாரத்துடன் ஓல்ட் ட்ரஃபார்ட் மைதானத்திற்கு வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களின் எண்ணம் எவ்வளவு அழகானது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
மான்செஸ்டரில் கடந்த 4 நாட்களாக விடாமல் மழை கொட்டிவருவதால் மழைக்கான வாய்ப்புகள் ஏற்கனவே மிக குறைவு என்று கூறினார் தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான். தற்போது ஓல்ட் ட்ரஃபோர்டில் நிலவி வரும் காலநிலை.
இன்று இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதால் இருநாட்டு ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த உற்சாகம் பிறநாட்டு வீரர்களையும் தொற்றிக் கொள்ள மான்செஸ்டர் வீதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது.