India Vs South Africa: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது.
இந்திய ஒருநாள் அணியின் வழக்கமான கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலையில், இந்த தொடரில் கே.எல் ராகுல் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்தியா தனது கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் விளையாடியது. இதில் மோசமான தோல்வியைத் தழுவியது. தொடரில் 10 ஆட்டங்களில் தோல்வியடையாமல் இருந்த இந்திய அணி கடைசி போட்டியில் தோல்வி பெற்றது பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இந்த தோல்வி முகத்தில் இருந்து மீண்டு வர ஒருநாள் போட்டியில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்வது அவசியமாகிறது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியா துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியுடன் தொடங்க நினைக்கும்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள நிலையில், இத்தொடரில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் ரிங்கு சிங், ரஜத் படிதார் மற்றும் சாய் சுதர்சன் போன்ற புதிய முகங்களுடன் புதிய தோற்றத்தில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
உலகக் கோப்பையை ஒளிரச் செய்த இந்திய அணியின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ளார். இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒருநாள் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகுவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது. அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, அவேஷ் கான், முகேஷ் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் களமிறங்குவர்.
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி போட்டி நேரம், ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் விவரங்கள்
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி எங்கு நடைபெறும்?
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி எப்போது தொடங்கும்?
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 1:00 மணிக்கு டாஸ் போடப்படும்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டியை எந்த டிவி சேனல்கள் ஒளிபரப்பும்?
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படுகிறது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டியின் ஆன்லைனில் நேரலையில் பார்ப்பது எப்படி?
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போட்டிகளை இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பும். டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் தென் ஆப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணத்தையும் பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.