Advertisment

IND vs SA Ist ODI Match: தென் ஆப்பிரிக்காவை 116 ரன்களுக்குள் சுருட்டிய ஹர்ஷ்தீப், ஆவேஷ் கான்; இந்தியா அபார வெற்றி!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
harshdeep

ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய ஒருநாள் ஆடும் லெவன் அணியில் இடம் பெறும் முக்கிய வீரராக இருப்பார்.

India vs South Africa: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி  3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. 

Advertisment

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

இந்திய ஒருநாள் அணியின் ​​வழக்கமான கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலையில், இந்த ஒருநாள் தொடரில் கே.எல் ராகுல் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்தியா தனது ஆடும் லெவன் செய்யக்கூடிய மற்ற மாற்றங்கள் இங்கு பார்க்கலாம். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs South Africa 1st ODI playing XI tip off

அணிக்கு திரும்பும் ஷ்ரேயாஸ் 

ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய ஒருநாள் ஆடும் லெவன் அணியில் இடம் பெறும் முக்கிய வீரராக இருப்பார். அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய மிடில் ஆர்டரில் நங்கூரமாக ஸ்ரேயாஸ்  செயல்பட்டார். அவர் இரு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்களுடன் 530 ரன்களை எடுத்து இருந்தார். எனவே, புதிய சுழற்சியில் அவருடன் தொடர இந்திய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  

சஞ்சு-வுக்கு இன்னொரு வாய்ப்பு?

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் சுவாரசியமான தேர்வுத் திட்டங்களில் ஒன்று சஞ்சு சாம்சனின் தேர்வு. அவர் இதுவரை இந்தியாவுக்காக விளையாடிய 13 போட்டிகளில் 390 ரன்களை எடுத்துள்ளார். எனினும், அவருக்கு ஒயிட் பால் கிரிக்கெட் இந்திய அணியில் தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்கா தொடரில் அவர் சேர்க்கப்பட்டிருப்பது கீப்பர் பேட்டருக்கு ஒரு புதிய வாய்ப்பை அளிக்கிறது.

சஞ்சு சாம்சனுடன் இந்தியா தொடங்கினால் கேப்டன் கே.எல்.ராகுல் எப்படி அட்ஜஸ்ட் செய்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உலகக் கோப்பை முழுவதும் சொந்த மண்ணில் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல்  செயல்பட்ட நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதிக்கு விக்கெட் கீப்பராக இருந்த சாம்சனுக்கு ராகுல் இடம் கொடுப்பாரா அல்லது நேர்மாறாக இருக்குமா? என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும் 

மீண்டும் ஆல்ரவுண்டராக அக்சர் 

16 பேர் கொண்ட அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இல்லாததால், அக்சர் படேல் மிகவும் அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டராக இடம் பெறுகிறார்.

29 வயதான அவர் இந்திய உலகக் கோப்பை அணியின் ஒரு பகுதியாக இருந்தார். ஆனால் போட்டிக்கு முன்னதாக அவருக்கு காயம் ஏற்படவே அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் இந்தத் தொடரில் தன்னை ஒரு பிரதான ஆல்ரவுண்டர் போட்டியாளராகக் காட்ட மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது. அக்சருடன் இணைந்து, குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஜோடி வலுவான சுழற்பந்து வீச்சுக்கு தேர்வாகும்.

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் 

இந்தியா:

ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ரின்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.

தென் ஆப்பிரிக்கா: 

ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஸோர்ஸி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மர்க்ரம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மாணித்தார். அதன்படி, தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரீஜா ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி ஜோர்ஸி பேட்டிங் செய்ய களம் இறங்கினர். ஆட்டத்தின் 2வது ஓவரில் ஹர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ஹெண்ட்ரிக்ஸ் ஸ்டெம்பை பறிகொடுத்து ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, வந்த ராஸ்ஸி வேன் டெர் துஸ்ஸென் ரன் எதுவும் எடுக்காத நிலையில், ஹர்ஷ்தீப்பின் அதே ஓவரில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வந்த வேகத்திலேயே வெளியேறினார். அடுத்து, கேப்டன் எய்டன் மர்க்ரம் பேட்டிங் செய்ய வந்தார். 

தென் ஆப்பிரிக்க அணி 7.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தபோது, தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி ஓரளவு அடித்து ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஜோர்ஸி 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் கே.எல். ராகுல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஹெய்ன்ரிச் கிளாசென் பேட்டிங் செய்ய வந்தார்.

தென் ஆப்பிரிக்க அணி 9.6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹெய்ன்ரிச் கிளாஸென் 9 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ஹர்ஷ்தீப் சிங் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, டேவிட் மில்லர் பேட்டிங் செய்ய வந்தார்.


தென் ஆப்பிரிக்க அணி 10.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தபோது, கேப்டன் எய்டன் மர்க்ரம் 21 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆவேஷ் கான் வீசிய பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, வியான் மல்டெர் பேட்டிங் செய்ய வந்தார்.

அடுத்த பந்திலேயே, வியான் மல்டெர், ஆவேஷ் கான் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, அண்டில் பெஹ்லுக்வாயோ பேட்டிங் செய்ய வந்தார். 

தென் ஆப்பிரிக்க அணி 12.6 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்தபோது, 7 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த டேவிட் மில்லர், ஆவேஷ் கான் பந்தில் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, கேஷவ் மஹராஜ் பேட்டிங் செய்ய வந்தார்.

தென் ஆப்பிரிக்க அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்திருந்தபோது, கேஷவ் மஹராஜ் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ஆவேஷ் கான் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து நன்றி பர்ஜர் பேட்டிஞ் செய்ய வந்தார். இதற்கு, பிறகு, தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் ரன் எடுக்க வேண்டும் என்பதைவிட விக்கெட்டுகளைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று மெதுவாக விளையாடினார்கள்.

தென் ஆப்பிரிக்க அணி 25.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தபோது, நிதானமாக விளையாடிய அண்டில் பெஹ்லுக்வாயோ 49 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹர்ஷ்தீப் சிங் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து, டப்ரைஸ் ஷம்சி பேட்டிங் செய்ய வந்தார்.

தென் ஆப்பிரிக்க அணி 27.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்தபோது, நன்றெ பர்ஜர் 32 பந்துகளில் 7 ரன்கள் அடித்திருந்த ந்லையில்,  குல்தீப் யாதவ் வீசிய பந்தில் போல்ட் அவுட் ஆனார். இதன் மூலம் தென் ஆப்பிர்க்க அணி 116 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 

இந்திய அணியில் அபாரமாக பந்து வீசிய ஹர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும் ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக, ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன் பேட்டிங் செய்ய களம் இறங்கினர். 

இந்திய அணி 3.4 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்திருந்தபோது, 10 பந்துகளில் 5 ரன்கள் அடித்திருந்த ருதுராஜ் வியான் முல்டெர் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து, ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தார். சாய் சுதர்சன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடினர். பிறகு அடித்து ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து, சாய் சுதர்சன் அரைசதம் அடித்தார். 

இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்கள் எடுத்திருந்தபோது, அண்டில் பெஹ்லுக்வாயோ பந்தில் டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரை அடுத்து, திலக் வர்மா பேட்டிங் செய்ய வந்தார். 

இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் ஹர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் அபாரமாக பந்துவீசி தென் ஆப்பிரிக்க அணியை 116 ரன்களுக்குள் சுருட்டியதால், 117 என்ற எளிதான இலக்கை மிக விரைவாக அடைந்து இந்தியா அபார வெற்றி பெற முடிந்தது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment