இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல்வாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 107/3 ரன்கள் எடுத்துள்ளது.
விரெட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளனர்.
1 day to go. Are you ready? #FreedomSeries #SAvIND pic.twitter.com/3WKss7R0c5
— BCCI (@BCCI) 4 January 2018
இதன் படி இந்தியா - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தின் இன்று (இந்திய நேரப்படி பகம் 2 மணி) தொடங்கியது.
உள்நாட்டில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சென்று விளையாடுகிறது. டெஸ்ட் தர வரிசையில் இந்திய அணி முதலாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதுவரை தென் ஆப்பிரிக்காவில் 6 முறை டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியுள்ளது. இதில் ஒரு முறை கூட இந்திய அணி தொடரை வென்றதில்லை.
Proud moment for @Jaspritbumrah93 as he receives his Test cap from #TeamIndia Skipper @imVkohli #FreedomSeries #SAvIND pic.twitter.com/H7s4w8gSmh
— BCCI (@BCCI) 5 January 2018
தென் ஆப்பிரிக்கா மைதானத்தில் உள்ள புல்தரை பிட்ச்களில் பந்துகள் அதிவேகத்தில் எகிறும். பந்துகளின் ஸ்விங்கை கணித்து ஆடாவிட்டால் அவுட்டாக நேரிடும். இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான விஜய், தவான் அல்லது லோகேஷ் ராகுல் ஜோடியின் கையில்தான் இந்திய அணியின் வெற்றி அடங்கியிருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் புதிய பந்தில் அவுட்டாகாமல் இருந்தால் போதும். அவர்களுக்கு பின்னால் வரும் விராட் கோலி, புகாரா, ரஹானே, விருத்தமான் சஹா, ரோகித் சர்மா ஆகியோரும் கைகொடுத்தால் போதிய அள்வுக்கு ரன்களை சேர்க்க முடியும். அல்லது வெற்றி இலக்கை எட்ட முடியும். இதில் ரஹானே வெளிநாடுகளில் விளையாடும் போது அதிக ரன்கள் சேர்த்த பேட்ஸ்மேனாக உள்ளார். வேகப்பந்து வீசாளர்களில் புவனேஷ்குமார், உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் இந்திய அணியில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா அணியும், பந்துவீச்சு மட்டைவீச்சு இரண்டிலும் சிறப்பாக உள்ளது. கேப்டவுன் ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
பகல் 2 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஜடேஜா, ரஹானே ஆகியோருக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் தனது அட்டாக்கை தொடங்கினார். அவரது மூன்றாவது பந்தில் தென் ஆப்பிரிக்காவின் முதல் விக்கெட் விழுந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் டக்கவுட்டாகி வெளியேறினார். புவனேஷ்குமார் வீசிய முதல் 6 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Bhuvi ,as lethal an opening spell one would ever see. Hope we make the most of this terrific start.#SAvIND
— Mohammad Kaif (@MohammadKaif) 5 January 2018
அதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட தென் ஆப்பிரிக்க அணியினர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஏபி டி.வில்லியர்ஸ் - ட்யூப்ளிக் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஏபி.டி.வில்லயர்ஸ் மதிய இடைவேளையின் போது 95 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 107 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து விளையாடி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.