India-vs-south-africa: தென் ஆப்பிரிக்க மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்துகொண்டுள்ளது. இந்த தொடருக்கான முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருந்த நிலையில், பலத்த மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
இன்று மழை வாய்ப்பு எப்படி?
இந்நிலையில், இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இன்றைய போட்டிக்கும் மழை அச்சுறுத்தல் உள்ளது. போட்டி நடக்கும் கெபேஹா நகரில் இன்று மழை பெய்வதற்கு 70 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும், வெப்பநிலை சுமார் 21 டிகிரி செல்சியஸாகவும், ஈரப்பதத்தின் அளவு தோராயமாக 75 சதவீதமாகவும், காற்றின் வேகம் மணிக்கு 35 கிமீ ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாலை நேரத்தில் மழையின் தாக்கம் குறைய வாய்ப்பிருப்பதால், குறைந்த ஓவர்களுடன் போட்டி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணைகேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது. சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“