தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையில் டர்பனில் நடந்த முதலாவது டி20-யில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்கிற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
Read In English: India vs South Africa LIVE Cricket Score, 2nd T20I: Will rain play spoilsport as IND face SA in Gqeberha?
இந்த நிலையில், இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு க்கெபர்ஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 39 ரன்களும், அக்சர் படேல் 27 ரன்களும் அடித்தனர்.
125 ரன்கள் எடுத்தால் வெற்றி என எளிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி தொடக்கம் முதலே முனைப்பு காட்டியது. எனினும் சிறப்பாக பந்துவீசி இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்து விக்கெட்களை எடுத்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா 128 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதன்படி, அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 47 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், விஜய்குமார் வைஷாக், யஷ் தயாள், ராமன்தீப் சிங், ஜிதேஷ்மா சிங்
தென் ஆப்ரிக்கா: ரியான் ரிக்கெல்டன், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், பேட்ரிக் க்ரூகர், மார்கோ ஜான்சன், அண்டில் சிமெலேன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகராஜ், நகாபயோம்ஸி பீட்டர், ஆட்னீல் பார்ட்மேன், டோனோவன் ஃபெர்ரேன்ட், டோனோவன் ஃபெர்ரேன்ட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.