Advertisment

IND vs SA 3rd ODI: தென் ஆப்பிரிக்காவை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி... தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3வது ஒரு நாள் போட்டியில், தென் ஆப்பிரிக்காவை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

author-image
WebDesk
New Update
India vs South Africa 3rd ODI Live Score match updates Paarl in tamil

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா: 3வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India vs South Africa 3rd ODI : தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் இருந்த நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.  

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs South Africa Live Score, 3rd ODI

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் - இந்தியா முதலில் பேட்டிங்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரஜத் படிதார் - சாய் சுதர்சன் ஜோடி களமிறங்கியுள்ள நிலையில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளை விரட்டிய ரஜத் படிதார் 22 ரன்னில் அவுட் ஆனார். 10 ரன்களை எடுத்த நிலையில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இந்திய அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தபோது, நிதானமாக விளையாடிய கே.எல். ராகுல் 35 பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த நிலையில், வியான் முல்டெர் பந்தில், ஹெய்ன்ரிச் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, திலக் வர்மா சஞ்சு சாம்சன் உடன் ஜோடி சேர்ந்தார் 

சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஜோடி நிதானமாக அடித்து ஆடினார்கள். நிலைத்து நின்று விளையாடிய சஞ்சு சாம்சன் அரைச்சதம் அடித்தார். இவரை அடுத்து, திலக் வர்மாவும் அரை சதம் அடித்தார். 

இந்தி அணி 41.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தபோது, 52 ரன்கள் அடித்திருந்த திலக் வர்மா, கேஷவ் மஹராஜ் பந்தில் வியான் முல்டெர் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, ரின்கு சிங் பேட்டிங் செய்ய வந்தார். 

நிலைத்து நின்று விளையாடி வந்த சஞ்சு சாம்சன், 110 பந்துகளில் சதம் அடித்தார். மறுபுறம், ரின்கு சிங் அதிரடியாக விளையாடினார்.

இந்திய அணி 45.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்தபோது, சதம் அடித்து 108 ரன்கள் குவித்திருந்த சஞ்சு சாம்சன், லிஸாட் வில்லியம்ஸ் பந்தில், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, அக்சர் படேல் பேட்டிங் செய்ய வந்தார்.

இந்திய அணி தற்போது 46.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்திருந்தபோது, அக்சர் படேல் 1 ரன் மட்டுமே எடுத்து, பியூரன் ஹெண்ட்ரிக்ஸ் பந்தில், வியான் முல்டர் இடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார். அடுத்து, வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்ய வந்தார்.

அடித்து விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பியூடன் ஹெண்ட்ரிக்ஸ் பந்தில் மர்க்ரம் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஹர்ஷ்தீப் சிங் பேட்டிங் செய்ய வந்தார்.

அதிரடியாக விளையாடிய ரின்கு சிங் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பர்ஜர் பந்தில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஆவேஷ் கான் பேட்டிங் செய்ய வந்தார். 

இறுதியாக இந்திய அணி 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணியின், தொடக்க ஆட்டக்காரர்கள் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி ஜோர்ஸி இருவரும் பேட்டிங் செய்ய களம் இறங்கினர்.

தென் ஆப்பிரிக்கா அணி 8.2 ஓவர்களில் 59 ரன்கள் எடுத்திருந்தபோது, நிதானமாக விளையாடிய ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 24 பந்துகளில் 19 ரன்கள் அடித்திருந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் பந்தில் கே.எல். ராகுல் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, ராஸ்ஸீ வேன் டெர் துஸ்ஸென் பேட்டிங் செய்ய வந்தார். 

தென் ஆப்பிரிக்கா அணி 14.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருந்தபோது,  ராஸ்ஸீ வேன் டெர் துஸ்ஸென் 17 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில், அக்சர் படேல் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, எய்டென் மர்க்ரம் பேட்டிங் செய்ய வந்தார்.

நிலைத்து நின்று விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் அரை சதம் அடித்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி 25.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்தபோது, நன்றாக விளையாடி வந்த கேப்டன் எய்டென் மர்க்ரம் 41 பந்துகளில் 36 ரன்கள் அடித்திருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் பந்தில் கே.எல். ராகுல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஹெய்ன்ரிச் கிளாசென் பேட்டிங் செய்ய வந்தார். 

தென் ஆப்பிரிக்கா அணி 29.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தபோது, அதுவரை நிலைத்து நின்று விளையாடி வந்த தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஜோர்ஸி 87 பந்துகளில் 81 ரன்கள் அடித்திருந்த நிலையில், அர்ஷ்தீப் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து, டேவிட் மில்லர் பேட்டிங் செய்ய வந்தார். 

தென் ஆப்பிரிக்கா அணி 32.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தபோது, அடித்து விளையாடிய ஹெய்ன்ரிச் கிளாசென் 22 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆவேஷ் கான் பந்தில், சாய் சுதர்சன் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, வியான் முல்டெர் பேட்டிங் செய்ய வந்தார்.


தென் ஆப்பிரிக்கா அணி 33.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்திருந்தபோது, 1 ரன் மட்டுமே எடுத்த வியான் முல்டெர், வாஷிங்டன் சுந்தர் பந்தில், கே.எல். ராகுல் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, கேஷவ் மஹராஜ் பேட்டிங் செய்ய வந்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி 38 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தபோது, 10 ரன்கள் எடுத்திருந்த டேவிட் மில்லர், முகேஷ் குமார் பந்தில் கே.எல். ராகுல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.  அடுத்து, பியூரன் ஹெண்ட்ரிக்ஸ் பேட்டிங் செய்ய வந்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி 42.6 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்திருந்தபோது, 14 ரன்கள் அடித்திருந்த கேஷவ் மஹராஜ், அர்ஷ்தீப் சிங் பந்தில் ரின்கு சிங் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, லிஸாட்  வில்லியம் பேட்டிங் செய்ய வந்தார். 

தென் ஆப்பிரிக்கா அணி 44.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்தபோது, 2 ரன்கள் மட்டுமே அடித்திருந்த லிஸாட் வில்லியம்ஸ், அர்ஷ்தீப் சிங் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து, நன்றே பர்ஜர் பேட்டிங் செய்ய வந்தார்.  

தென் ஆப்பிரிக்கா அணி 45.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்திருந்தபோது, பியூரன் ஹெண்ட்ரிக்ஸ் 18 ரன் அடித்திருந்த நிலையில், ஆவேஷ் கான் பந்தில் சஞ்சு சாம்சன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

தென் ஆப்பிரிக்கா அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: 

இந்தியா: சஞ்சு சாம்சன், சாய் சுதர்சன், ரஜத் படிதார், திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார். 

தென் ஆப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஸோர்ஸி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வியான் முல்டர், கேசவ் மகராஜ், நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ்

சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 6 முறை ஒரு நாள் தொடரில் விளையாடியுள்ள தென்ஆப்பிரிக்க அணி, அதில் 5-ல் தொடரை வென்று  மிரட்டியிருக்கிறது. இந்தப் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை தொடரவே அந்த அணி தீவிரம் காட்டும். அந்த சாதனையை முறியடிக்க இந்தியா போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

பார்ல் மைதானத்தில் 5 ஆட்டங்களில் ஆடி இருக்கும் இந்திய அணி 2 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் 'டை'யில் முடிந்தது. இங்கு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் தோற்றதும் இதில் அடங்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment