Advertisment

சூர்யகுமார் 100, குல்தீப் 5 விக்கெட்... இந்தியா அபார வெற்றி : தொடரையும் சமன் செய்தது

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது.

author-image
WebDesk
New Update
Ind vs SA 3rd t20

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா: 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இன்று மோதல்

India-vs-south-africa: தென் ஆப்பிரிக்க மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்துகொண்டுள்ளது. இந்த தொடருக்கான முதலாவது டி20 போட்டி டர்பனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடக்க இருந்த நிலையில், பலத்த மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை நடந்த 2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற உள்ளது. இப்போட்டியானது  இன்று (வியாழக்கிழமை) இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. 

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் - கில் இருவரும் இன்னிங்சை தொடங்கிய நிலையில், இந்தியா 2 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்தது. 3-வது ஓவரை வீசிய கேசவ் மகராஜ் 2-வது பந்தில் சுப்மான் கில் (6 பந்து 12) அடுத்த பந்தில் திலக் வர்மா (0) விக்கெட்டை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதல் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியில் இறங்கினார். இதன் காரணமாக இந்திய அணி 5 ஓவர்களில் 56 ரன்கள் குவித்தது. ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தென்ஆப்பிரிக்க வீரர்கள் பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்தியதால் இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தது. 

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்தார். அவரை தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவும் அரைசதம் கடந்து அசத்தினார். பெஹியூக்வயோ வீசிய 13-வது ஓவரில் 3 சிக்சர் ஒரு பவுண்டரி அடித்த அவர் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.  

தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரின்கு சிங் நிதானமாக விளையாடிய நிலையில், மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். ஆனால் 19-வது ஓவரில் ரின்கு சிங் 14 ரன்களில் வீழ்ந்தார்.

கடைசி ஓவரை வில்லியம்ஸ் வீச முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் தனது 4-வது டி20 சதத்தை பதிவு செய்தார். ஆனாலும் அடுத்த பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். 56 பந்துகளில் 7 பவுண்டரி 8 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ் மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். 2-வது ஓவரின் 2-வது பந்தில் ரன் கணக்கை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 3-வது பந்தில் முதல் விக்கெட்டை இழந்தது. ரீஸ் பிரெட்டெஸ்கி 4 ரன்களில் முகேஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து கேப்டன் மார்க்ரம் களமிறங்கிய நிலையில், மறுமுனையில், ஹென்ட்ரிக்ஸ் 8 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய க்ளாசன் நிதானமாக விளையாட மறுமுனையில் மார்க்ரம் அதிரடியாக விளையா ரன்கள் சேர்த்தார். 6-வது ஒவரை வீசிய் அர்ஷ்தீப் சிங் 4-வது பந்தில் க்ளாசன் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால் 6 ஓவர்கள் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து 7-வது ஓவரை வீசிய கேப்டன் ஜடேஜா முதல் பந்திலேயே கேப்டன் மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்தினார். மார்க்ரம் 14 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 25 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய பெராரே மில்லருடன் சேர்ந்து அதிரடி ஆட முயற்சித்த நிலையில், குல்தீப் யாதவ் வீசிய 10-வது ஓவரின் 5-வது பந்தில் சிக்சர் அடித்து அசத்திய நிலையில், கடைசி பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் 10 ஓவர்கள் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து களமிறங்கிய பெஹியூக்வாயோ 3 பந்துகளில் ரன் கணக்கை தொடங்காமலே ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து சேகவ் மகராஜ் களமிறங்கினார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மில்லர் அவ்வப்போது பவுண்டரி சிக்சர் அடித்து ரன் கணக்கை உயர்த்தினார். ஆனால் குல்தீப் வீசிய 12-வது ஓவரின் கடைசி பந்தில் கேசவ் மகராஜ் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு 14-வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் தென்ஆப்பிரிக்க அணி 13.5 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த மில்லர் 25 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில் பிறந்த நாளில் களமிறங்கிய குல்தீப் யாதவ் 2.5 ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டகளை வீழ்த்தினார். 

அடுத்து ஜடேஜா 2 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப், முகேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Dec 14, 2023 23:52 IST
    குல்தீப் 5 விக்கெட் : இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

    202 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 13.5 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. பிறந்த நாளில் குல்தீப் 5 விக்கெட்டுகள் வீீழ்த்தி அசத்தினார். 

  • Dec 14, 2023 23:36 IST
    தென்ஆப்பிரிக்க 12 ஓவர்களில் 87/7

    202 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் தற்போது 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.

  • Dec 14, 2023 23:07 IST
    6 ஓவர்கள் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 42/3

    தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ் மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். 2-வது ஓவரின் 2-வது பந்தில் ரன் கணக்கை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 3-வது பந்தில் முதல் விக்கெட்டை இழந்தது. ரீஸ் பிரெட்டெஸ்கி 4 ரன்களில் முகேஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து கேப்டன் மார்க்ரம் களமிறங்கிய நிலையில், மறுமுனையில், ஹென்ட்ரிக்ஸ் 8 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய க்ளாசன் நிதானமாக விளையாட மறுமுனையில் மார்க்ரம் அதிரடியாக விளையா ரன்கள் சேர்த்தார். 6-வது ஒவரை வீசிய் அர்ஷ்தீப் சிங் 4-வது பந்தில் க்ளாசன் விக்கெட்டை வீழ்த்தினார்.

    இதனால் 6 ஓவர்கள் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது.

  • Dec 14, 2023 23:00 IST
    சூர்யகுமார் யாதவ் காயம் : கேப்டனாக ஜடேஜா

    202- ரன்கள் வெற்றி இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணி களமிறங்கிய நிலையில், பீல்டிங்கின்போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் காயமடைந்தார். இதனால் அவர் வெளியேறியதை தொடர்ந்து ஜடேஜா கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். 

  • Dec 14, 2023 22:12 IST
    சதமடித்த சூர்யகுமார் யாதவ் அவுட்

    முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் - கில் இருவரும் இன்னிங்சை தொடங்கிய நிலையில், இந்தியா 2 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்தது. 3-வது ஓவரை வீசிய கேசவ் மகராஜ் 2-வது பந்தில் சுப்மான் கில் (6 பந்து 12) அடுத்த பந்தில் திலக் வர்மா (0) விக்கெட்டை வீழ்த்தினார்.

    தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதல் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியில் இறங்கினார். இதன் காரணமாக இந்திய அணி 5 ஓவர்களில் 56 ரன்கள் குவித்தது. ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தென்ஆப்பிரிக்க வீரர்கள் பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்தியதால் இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தது. 

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்தார். அவரை தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவும் அரைசதம் கடந்து அசத்தினார். பெஹியூக்வயோ வீசிய 13-வது ஓவரில் 3 சிக்சர் ஒரு பவுண்டரி அடித்த அவர் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.  

    தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரின்கு சிங் நிதானமாக விளையாடிய நிலையில், மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். ஆனால் 19-வது ஓவரில் ரின்கு சிங் 14 ரன்களில் வீழ்ந்தார்.

    கடைசி ஓவரை வில்லியம்ஸ் வீச முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் தனது 4-வது டி20 சதத்தை பதிவு செய்தார். ஆனாலும் அடுத்த பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். 56 பந்துகளில் 7 பவுண்டரி 8 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்தார்.

  • Dec 14, 2023 21:40 IST
    ஜெய்ஸ்வால் அவுட்

    முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் - கில் இருவரும் இன்னிங்சை தொடங்கிய நிலையில், இந்தியா 2 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்தது. 3-வது ஓவரை வீசிய கேசவ் மகராஜ் 2-வது பந்தில் சுப்மான் கில் (6 பந்து 12) அடுத்த பந்தில் திலக் வர்மா (0) விக்கெட்டை வீழ்த்தினார்.

    தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதல் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியில் இறங்கினார். இதன் காரணமாக இந்திய அணி 5 ஓவர்களில் 56 ரன்கள் குவித்தது. ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தென்ஆப்பிரிக்க வீரர்கள் பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்தியதால் இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தது. 

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்தார். அவரை தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவும் அரைசதம் கடந்து அசத்தினார். பெஹியூக்வயோ வீசிய 13-வது ஓவரில் 3 சிக்சர் ஒரு பவுண்டரி அடித்த அவர் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.  

    தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  • Dec 14, 2023 21:33 IST
    சூர்யகுமார் யாதவ் அதிரடி

    முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் - கில் இருவரும் இன்னிங்சை தொடங்கிய நிலையில், இந்தியா 2 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்தது. 3-வது ஓவரை வீசிய கேசவ் மகராஜ் 2-வது பந்தில் சுப்மான் கில் (6 பந்து 12) அடுத்த பந்தில் திலக் வர்மா (0) விக்கெட்டை வீழ்த்தினார்.

    தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதல் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியில் இறங்கினார். இதன் காரணமாக இந்திய அணி 5 ஓவர்களில் 56 ரன்கள் குவித்தது. ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தென்ஆப்பிரிக்க வீரர்கள் பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்தியதால் இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தது. 

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்தார். அவரை தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவும் அரைசதம் கடந்து அசத்தினார். பெஹியூக்வயோ வீசிய 13-வது ஓவரில் 3 சிக்சர் ஒரு பவுண்டரி அடித்த அவர் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.  

  • Dec 14, 2023 21:27 IST
    ஜெய்ஸ்வால் அரைசதம் : இந்தியா நிதான ஆட்டம்

    முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் - கில் இருவரும் இன்னிங்சை தொடங்கிய நிலையில், இந்தியா 2 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்தது. 3-வது ஓவரை வீசிய கேசவ் மகராஜ் 2-வது பந்தில் சுப்மான் கில் (6 பந்து 12) அடுத்த பந்தில் திலக் வர்மா (0) விக்கெட்டை வீழ்த்தினார்.

    தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதல் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியில் இறங்கினார். இதன் காரணமாக இந்திய அணி 5 ஓவர்களில் 56 ரன்கள் குவித்தது. ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தென்ஆப்பிரிக்க வீரர்கள் பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்தியதால் இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தது. 

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்தார். 

  • Dec 14, 2023 21:20 IST
    10 ஓவர்கள் முடிவில் இந்தியா 87/2

    முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் - கில் இருவரும் இன்னிங்சை தொடங்கிய நிலையில், இந்தியா 2 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்தது. 3-வது ஓவரை வீசிய கேசவ் மகராஜ் 2-வது பந்தில் சுப்மான் கில் (6 பந்து 12) அடுத்த பந்தில் திலக் வர்மா (0) விக்கெட்டை வீழ்த்தினார்.

    தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதல் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியில் இறங்கினார். இதன் காரணமாக இந்திய அணி 5 ஓவர்களில் 56 ரன்கள் குவித்தது. ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தென்ஆப்பிரிக்க வீரர்கள் பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்தியதால் இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தது. 

  • Dec 14, 2023 20:56 IST
    5 ஓவர்களில் 56 ரன்கள் : இந்தியா அதிரடி

    முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் - கில் இருவரும் இன்னிங்சை தொடங்கிய நிலையில், இந்தியா 2 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்தது. 3-வது ஓவரை வீசிய கேசவ் மகராஜ் 2-வது பந்தில் சுப்மான் கில் (6 பந்து 12) அடுத்த பந்தில் திலக் வர்மா (0) விக்கெட்டை வீழ்த்தினார்.

    தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதல் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியில் இறங்கினார். இதன் காரணமாக இந்திய அணி 5 ஓவர்களில் 56 ரன்கள் குவித்தது.

  • Dec 14, 2023 20:45 IST
    அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியா

    முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் - கில் இருவரும் இன்னிங்சை தொடங்கிய நிலையில், இந்தியா 2 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்தது. 3-வது ஓவரை வீசிய கேசவ் மகராஜ் 2-வது பந்தில் சுப்மான் கில் (6 பந்து 12) அடுத்த பந்தில் திலக் வர்மா (0) விக்கெட்டை வீழ்த்தினார்.

  • Dec 14, 2023 20:16 IST
    தென்ஆப்பிரிக்க அணி பந்துவீச முடிவு

    ஜெகனஸ்பார்க்கில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

  • Dec 14, 2023 17:10 IST
    இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்!

    இந்தியா: ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

    தென் ஆப்பிரிக்கா: மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேட்ச்), ஹென்ரிச் கிளாசென் (வாரம்), டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கேசவ் மகராஜ், அண்டில் பெஹ்லுக்வாயோ, நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி

  • Dec 14, 2023 17:09 IST
    களமிறங்கும் ஸ்ரேயாஸ், ரவி பிஷ்னோய் - இந்தியா ஆடும் லெவன் எப்படி?

    கடந்த ஆட்டத்தில் வெளியே உட்கார வைக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர், ரவி பிஷ்னோய் ஆகியோர் இன்றைய ஆட்டத்திற்கு திரும்ப வாய்ப்புள்ளது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா ஆயத்தமாகியுள்ளது. 

  • Dec 14, 2023 17:06 IST
    ஜோகன்னஸ்பர்க்கில் நேருக்கு நேர்!

    ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இந்தியா இதுவரை 5 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அதில் 3-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.

  • Dec 14, 2023 17:03 IST
    25% மழைக்கு வாய்ப்பு?

    இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஜோகன்னஸ்பர்க்கிலும் மழை குறுக்கிடலாம். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் மழை பெய்வதற்கு 25 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கிறது.

  • Dec 14, 2023 16:34 IST
    மார்கோ, கோட்ஜீ  இல்லை!

    2வது போட்டியில் ஆட்டத்தில் மார்க்ரம், ஹென்ரிக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்டு கோட்ஜீ அசத்தினர். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் மார்கோ யான்சென், கோட்ஜீ ஆகியோர் டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்கு உள்ளூர் முதல்தர போட்டிக்கு செல்வதால் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார்கள். 

  • Dec 14, 2023 16:29 IST
    தொடரை சமன் செய்யுமா இந்தியா? 

    வெற்றி உற்சாகத்துடன் களம் காணும் தென்ஆப்பிரிக்கா சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் தொடரை கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. மறுபுறம், முந்தைய போட்டி தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய போராடும். 
    எனவே, இந்த அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரப்புக்கு பஞ்சாமிருக்காது

  • Dec 14, 2023 16:13 IST
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    இன்று நடைபெறும் இந்தியா VS தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான  3வது டி20 மற்றும் கடைசி போட்டி  குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

India Vs South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment