இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். தென்னாப்பிரிக்க அணி , தனது துவக்க வீரர்களின் விக்கெட்களை உடனடியாக இழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்கா 2 விக்கெட்கள் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. இது இந்திய அணியின் ஸ்கோரை விட 488 ரன்கள் குறைவு ஆகும்.
இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா, முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். ரஹானே சதமடித்தார். 2016ம் ஆண்டுக்கு பிறகு ரஹானே சதமடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரவீந்திர ஜடேஜா அரைசதமடித்தார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
டெஸ்ட் தொடரில், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 3வது டெஸ்ட் ராஞ்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மயங்க் அகர்வால், 10 ரன்களில் வெளியேற, ரோகித் சர்மா மறுபக்கம் அதிரடி காட்டினார். புஜாரா, ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். கேப்டன் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரஹானே நிதானமாக ஆடி வந்தார். 58 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்படவே, மழையும் பெய்ய துவங்கியது. இதன்காரணமாக, முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
ரோகித் 116 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம், தற்போது நடைபெற்று வருகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச் டி சேனலில் போட்டியை நேரடியாக காணலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டாரில் போட்டியைக் காணலாம். தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.