குறைந்தபட்ச வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் : ஜோகன்பர்க் பிட்ச் குறித்து கங்குலி ட்விட்டரில் கருத்து!

டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளத்தை இந்த வகையில் தயார் செய்திருப்பது ஏற்புடையதல்ல, குறைந்த பட்சம் வாய்ப்பாவது அளிக்கும் வகையில் பிட்ச் இருக்க வேண்டும்.

By: January 25, 2018, 3:23:06 PM

வீரர்களுக்கு குறைந்த பட்சம் வாய்ப்பு கொடுக்கும் அளவில் பிட்ச் அமைக்க வேண்டும் என்று கங்குலி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் உள்ள ஆடுகளம் வீரர்களுக்கு மிகவும் கடினமாக இருப்பதாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ற ஆடுகளம் இது அல்ல என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நிதானமாக ஆடி விராட் கோலி மற்றும் புஜாரா அரை சதம் எடுத்தனர். அதன் பின்பு ஆடிய முன்னணி வீரர்கள் பலர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியாக இந்திய அணி 187 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது. இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோகன்னஸ்பர்க் ஆடுகளத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில் “டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளத்தை இந்த வகையில் தயார் செய்திருப்பது ஏற்புடையதல்ல, வீரர்களுக்கு குறைந்த பட்சம் வாய்ப்பாவது அளிக்கும் வகையில் பிட்ச் இருக்க வேண்டும். இதில் ஐசிசி முறையான தலையிட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:India vs south africa 3rd test sourav ganguly raises says wanderers pitch unfair on batsmen

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X