இந்தியா - தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு சிறந்த அணியை தேர்வு செய்வதில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவருக்கும் பெரிய சவால் காத்திருக்கிறது என்று சொல்லலாம்.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. விரைவில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளதால் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது
கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதை தொடர்ந்து சில மாதங்கள் இடைவெளிக்கு பின் இந்திய அணி மீண்டும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான சிறந்த அணியை தேர்வு செய்ய கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் விரும்பினாலும், சில வீரர்களை தேர்வு செய்வதில் சிக்கலை எதிர்கொண்ட சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
3-வது இடத்திற்காக வீரர் சுப்மான் கில்?
இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கின் தூண்களாக இருந்த அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகிய இருவருமே இந்த தொடரில் இடம்பெறாத நிலையில், 3-வது இடத்தில் யார் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் தொடக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மாவுடன், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினாலும், 3-வது இடத்தில் உள்ள புஜாராவுக்கு பதிலாக கில் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கில், முதல்முறையாக 3வது இடத்தில் பேட்டிங் செய்தார். இதற்கு முன் 16 டெஸ்டில், தொடக்க ஆட்டக்காரராக 32.37 சராசரியில் இரண்டு சதம் மற்றும் நான்கு அரைசதங்களுடன் 874 ரன்கள் எடுத்திருந்தார். ஆனாலும் அவர் 3-வது வீரராக களமிறங்கிய 2 டெஸ்ட் போட்டிகளிலும், 6, 10 மற்றும் 29* ரன்கள் மட்டுமெ எடுத்தார். அதே இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 171, 57 மற்றும் 38 ரன்கள் எடுத்திருந்தார்.
விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் எந்த வரிசையில் களமிறங்குவார்?
இந்தியாவுக்காக இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் முதல் முறையாக தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விக்கெட் கீப்பராக களமிறங்க உள்ளார். ஆனால் இவர் எந்த வரிசையில் பேட்டிங் செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் 3-வது பேட்டிங் வரிசைக்கு ராகுல் பொருத்தமாக இருப்பார். கடந்த 2021-22 தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த அவர், 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 226 ரன்கள் எடுத்திருந்தார்.
ராகுல் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 5 முறை மட்டுமே நம்பர் 3 இல் பேட்டிங் செய்துள்ளார். கடைசியாக 2018 இல் தென்னாப்பிரிக்காவில் விளையாடிய அவர், சொந்த சூழ்நிலையில் பெங்களூருவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அரைசதத்துடன் 17.60 சராசரியில் 88 ரன்கள் எடுத்திருந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயரின் வழக்கமான இடமான 5-வது இடத்தில் அவர் பேட் செய்ய வேண்டுமா அல்லது இரண்டாவது புதிய பந்தை சமாளிக்கும் வகையில் அவர், 6-வது இடத்தில் அவர் பேட் செய்ய வேண்டுமா என்பது குறித்து குழப்பம் நீடிக்கிறது. குழப்பம். 2014 ஆம் ஆண்டு மெல்போர்னில் தனது அறிமுக ஆட்டத்தில் ராகுல் முதல் மூன்று இடங்களுக்கு வெளியே பேட்டிங் செய்தார். அந்த டெஸ்ட் போட்டியில் அவர் 8 மற்றும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அஸ்வின் ஆடும் வெலனில் இடம் பிடிப்பாரா?
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு பெரிய சோதனையாக வருவது ரவிச்சந்திரன் அஸ்வின், ஒரு கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்படுவாரா என்பது தான். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 5 சதங்கள் அடித்துள்ள அஸ்வின், ஆடும் லெவனில் இடம் பெறுவது இந்திய அணியின் பேட்டிங்கிற்கு கூடுதல் பலமாக இருக்கும். இந்தியா பெரும்பாலும் வெளிநாட்டு மைதானங்களில் ஷர்துல் தாக்கூரைத் தேர்ந்தெடுத்துள்ளது, மேலும் செஞ்சூரியனில் 1 மற்றும் 2 நாட்களில் மழை பெய்யும் என்ற முன்னறிவிப்பின் அடிப்படையில் தாக்கூரே தேர்வு செய்யப்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.
முகேஷ் குமார் vs பிரசித் கிருஷ்ணா
முகமது ஷமி கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டிருந்தால் வேகப்பந்துவீச்சாளர் தேர்வு தலைவலியாக இருந்திருக்காது. ஆனால் பெங்களூருவில் உள்ள என்.சி.ஏ.வில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர், சிகிச்சை பெறுவதால், மேற்கிந்திய தீவுகளில் அறிமுகமான முகேஷ் அல்லது இன்னும் டெஸ்ட் வாய்ப்பு கிடைக்காத கிருஷ்ணா ஆகியோரை இந்தியா தேர்வு செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை நெட்ஸில் விராட் கோலியுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணா, அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.