டி 20 உலக கோப்பை: இந்தியா சாம்பியன்; பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வி

டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. 2-வது முறையாக டி20 கோப்பையை இந்திய அணி வென்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India win

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 1 மாதமாக 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதி போட்டிகளில் வென்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. 

Advertisment

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான இறுதிப்போட்டி நேற்று (சனிக்கிழமை) பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா - இந்தியா அணிகள் பலப்பரீட்ச்சை நடத்தின. 

முதலில் ஆடிய இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென் ஆப்பிரிக்கா. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 2-வது முறையாக டி20 உலக கோப்பையை தனதாக்கியது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs South Africa Live Score, T20 World Cup 2024 Final

Advertisment
Advertisements

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக விராத் கோலி 76 ரன்களும், அக்ஷர் பட்டேல் 47 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் குவிண்டன் டி காக் 39 ரன்னும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்னும், ஹெய்னரிச் கிளாசன் 52 ரன்னும், டேவிட் மில்லர் 21 ரன்னும் அதிகப்பட்சமாக எடுத்தனர்.
 இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஜாஸ்பிரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய அணிக்கு மோடி வாழ்த்து

டி20 உலக கோப்பை போட்டியில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் உலக கோப்பையை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Jun 29, 2024 23:56 IST

    இந்தியா அபார வெற்றி


    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை தனதாக்கியது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஜாஸ்பிரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.



  • Jun 29, 2024 23:20 IST

    8 பந்துகளில் 17 ரன்கள் தேவை

    இந்தியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 பந்துகளில் 17 ரன்கள் தேவை. கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ளன.



  • Jun 29, 2024 22:52 IST

    தென் ஆப்பிரிக்கா 113 ரன்களுக்கு 4 விக்கெட் இழப்பு


    இந்தியாவுக்கு எதிராக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 13.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.



  • Jun 29, 2024 22:31 IST

    தென் ஆப்பிரிக்கா ரன் குவிப்பு

    தென் ஆப்பிரிக்கா 9.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.



  • Jun 29, 2024 21:39 IST

    தென் ஆப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்கு

    டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளத.



  • Jun 29, 2024 21:38 IST

    76 ரன்னில் அவுட் ஆன விராத் கோலி

    59 பந்துகளில் 2 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்திருந்த விராத் கோலி மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் அவுட் ஆனார்.



  • Jun 29, 2024 21:11 IST

    47 ரன்னில் அக்ஷர் பட்டேல் ரன் அவுட்

    31 பந்துகளில் 4 சிக்ஸர் ஒரு பவுண்டரி உடன் 47 ரன்கள் குவித்த அக்ஷர் பட்டேல் ரன் அவுட் முறையில் வெளியேறினார்.



  • Jun 29, 2024 20:59 IST

    13 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், இந்திய அணியில் விராட் கோலி - அக்சர் படேல் ஜோடி களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    இந்திய அணி 13 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 29, 2024 20:54 IST

    12 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், இந்திய அணியில் விராட் கோலி - அக்சர் படேல் ஜோடி களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    இந்திய அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 29, 2024 20:53 IST

    11 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், இந்திய அணியில் விராட் கோலி - அக்சர் படேல் ஜோடி களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    இந்திய அணி 11 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 29, 2024 20:38 IST

    9 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், இந்திய அணியில் விராட் கோலி - அக்சர் படேல் ஜோடி களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    இந்திய அணி 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 29, 2024 20:35 IST

    8 ஓவர்கள் முடிவில் இந்தியா 

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், இந்திய அணியில் விராட் கோலி - அக்சர் படேல் ஜோடி களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    இந்திய அணி 8 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 29, 2024 20:29 IST

    பவர் பிளே (6 ஓவர்கள்) முடிவில் இந்தியா 

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், இந்திய அணியில் விராட் கோலி - அக்சர் படேல் ஜோடி களத்தில் விளையாடி வருகிறார்கள். 

    இந்திய அணி 6 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 29, 2024 20:23 IST

    சூரியகுமார் அவுட் 

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், இந்திய அணியில் தொடக்க வீரராக களமாடிய கேப்டன் ரோகித் 2 பவுண்டரியை விரட்டி 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரை அடுத்து வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.  அவருக்குப் பிறகு வந்த சூரியகுமார் 3 ரன்னுக்கு அவுட் ஆனார். 



  • Jun 29, 2024 20:11 IST

    பண்ட் அவுட் 

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், இந்திய அணியில் தொடக்க வீரராக களமாடிய கேப்டன் ரோகித் 2 பவுண்டரியை விரட்டி 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரை அடுத்து வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.  



  • Jun 29, 2024 20:08 IST

    ரோகித் அவுட் 

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், இந்திய அணியில் தொடக்க வீரராக களமாடிய கேப்டன் ரோகித் 2 பவுண்டரியை விரட்டி 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 



  • Jun 29, 2024 20:04 IST

    ஆட்டம் இனிதே தொடக்கம்... அதிரடி காட்டும் ரோகித் - கோலி!

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் - விராட் கோலி ஜோடி களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகிறார்கள். 

    இந்திய அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Jun 29, 2024 20:02 IST

    ஆட்டம் இனிதே தொடக்கம்!

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் - விராட் கோலி ஜோடி களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகிறார்கள். 



  • Jun 29, 2024 19:51 IST

    இரு அணிகளில் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்!

    இந்தியா 

    ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா



  • Jun 29, 2024 19:50 IST

    இரு அணிகளில் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்!

    தென் ஆப்ரிக்கா: 

    குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி. 



  • Jun 29, 2024 19:50 IST

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்... தென் ஆப்ரிக்கா பவுலிங்! 

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்கா பவுலிங் செய்கிறது. 



  • Jun 29, 2024 19:31 IST

    பரிசுத்தொகை எவ்வளவு?

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10½ கோடி கிடைக்கும்.



  • Jun 29, 2024 19:29 IST

    மழைக்கான வாய்ப்பு 55%

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் மழை அச்சுறுத்தல் நிலவுகிறது. அங்கு இடியுடன் கூடிய மழை மாற்று காற்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், மழைக்கான வாய்ப்பு 55% ஆகவும், ஈரப்பதம் 76% ஆகவும் இருக்கும் என்றும் தற்போதைய வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 



  • Jun 29, 2024 19:24 IST

    மழைக்கு வாய்ப்பு 12%... அப்ப இந்தியா தென் ஆப்ரிக்கா இறுதிப் போட்டி நிச்சயம் நடக்குமா?

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் மழை அச்சுறுத்தல் நிலவுகிறது. அங்கு மழை பொழிவுக்கு 12% வாய்ப்பு உள்ளதாக தற்போதைய வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 



  • Jun 29, 2024 19:23 IST

    இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்:

    தென்ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி. 



  • Jun 29, 2024 19:05 IST

    இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா



  • Jun 29, 2024 19:03 IST

    நேருக்கு நேர்

    டி-20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் இந்தியாவும், 11-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. 



  • Jun 29, 2024 18:48 IST

    கென்சிங்டன் ஓவல் ஆடுகளம் எப்படி?

    கென்சிங்டன் ஓவல் மைதானத்தின் மையத்தில் 2 ஆடுகளங்கள் உள்ளன. இதில் ஒன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்கும், மற்றொன்று வேகப்பந்து  வீச்சாளர்களுக்கும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வேகப்பந்து  வீச்சாளர்களுக்கும் உதவும் ஆடுகளம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 


    இந்த மைதானத்தில் நடப்பு தொடரில் இங்கு 8 ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 181 ரன்கள் எடுத்து வெற்றி கண்ட ஆட்டமும் அடங்கும். அந்த அனுபவம் இந்தியாவுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும்.



  • Jun 29, 2024 18:42 IST

    முதல்முறையாக இறுதிப்போட்டி... கோப்பையை வசப்படுத்துமா தென்ஆப்பிரிக்கா?

    உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் தென்ஆப்பிரிக்க அணி மீது ஆரம்பத்தில் பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. உலகக் கோப்பைக்கு முன்பாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 11 ஆட்டங்களில் ஆடி 9-ல் தோற்று இருந்தது. ஆனால் உலகக் கோப்பைக்குள் நுழைந்ததும் பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்கள் அவர்களுக்கு புது தெம்பை கொடுத்தது. லீக்கில் 4 வெற்றி, சூப்பர் 8 சுற்றில் 3 வெற்றி, அரைஇறுதி என்று அந்த அணியும் சறுக்கலின்றி வீறுநடை போடுகிறது.

    அது மட்டுமின்றி உலகக் கோப்பை போட்டி ஒன்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு அரைஇறுதியை தாண்டியதில்லை. அவர்களின் பேட்டிங் சீரற்றதாக காணப்பட்டாலும் ககிசோ ரபடா (12 விக்கெட்), ஷம்சி (11), அன்ரிச் நோர்டியா (13) மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ் ஆகிய பந்து வீச்சு கூட்டணி அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறது. இதில் அரைஇறுதியில் ஆப்கானிஸ்தானை 56 ரன்னில் சுருட்டியது கவனிக்கத்தக்கது. பந்து வீச்சில் வலுவாக உள்ள நிலையில் குயின்டான் டி காக், கிளாசென், மில்லர், கேப்டன் மார்க்ரம், ஹென்ரிக்ஸ் ஆகியோரது பேட்டிங் ஒருசேர கிளிக் ஆகும் பட்சத்தில், இன்னும் அபாயகரமான அணியாக மாறி விடுவார்கள். அதனால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.



  • Jun 29, 2024 18:40 IST

    48% மழைக்கு வாய்ப்பு - இந்தியா தென் ஆப்ரிக்கா இறுதிப் போட்டி இன்று நடக்குமா? 

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் மழை அச்சுறுத்தல் நிலவுகிறது. அங்கு மழை பொழிவுக்கு 48% வாய்ப்பு உள்ளதாக தற்போதைய வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 



  • Jun 29, 2024 18:40 IST

    10 ஆண்டு தேடல்... கோப்பையை முத்தமிடுமா இந்தியா?

    கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் கடந்த இரு ஆட்டங்களில் பேட்டிங்கில் அசத்தினர். ஆனால் விராட் கோலியின் செயல்பாடு தொடர்ந்து கவலைக்குரியதாக இருக்கிறது. 7 ஆட்டங்களில் 75 ரன் மட்டுமே எடுத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர் வரிசைக்கு தாவிய பிறகு அவரது இயல்பான பேட்டிங்கே காணாமல் போய் விட்டது. இருப்பினும் அவருக்கு ஆதரவாக உள்ள கேப்டன் ரோகித் சர்மா, 'கோலியின் தரம் குறித்து எங்களுக்கு தெரியும். 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுபவருக்கு பார்ம் ஒரு பிரச்சினையே இல்லை. அனேகமாக இறுதிப்போட்டியில் ஒட்டுமொத்தமாக தனது சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்துவார்' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். இதே போல் ஷிவம் துபேவும் கணிசமாக ரன் சேர்க்க வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (13 விக்கெட்), அர்ஷ்தீப்சிங் (15), குல்தீப் யாதவ் (10), அக்சர் பட்டேல் பிரமாதப்படுத்துகிறார்கள்.

    கடந்த ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பை இரண்டிலும் இறுதிப்போட்டியில் கோட்டை விட்ட இந்தியா இந்த முறை கோப்பையை கையில் ஏந்தி நீண்ட கால ஏக்கத்தை தணிக்குமா என்பதே ரசிகர்களின் பேராவலாகும். விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு இதுவே கடைசி டி20 உலகக் கோப்பை போட்டியாகும். அதனால் அவர்களும் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுவார்கள். 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை உச்சிமுகர்ந்த பிறகு இந்தியா எந்த ஐ.சி.சி. கோப்பையும் வென்றதில்லை. 



  • Jun 29, 2024 18:38 IST

    அதே உத்வேகத்துடன் களமாடும் இந்தியா!

    முன்னாள் சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான இந்தியா, நடப்பு தொடரில் தோல்வி பக்கமே செல்லாமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. லீக்கில் பாகிஸ்தான் உள்பட 3 அணிகளையும், சூப்பர்8 சுற்றில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 அணிகளையும் தோற்கடித்தது. கனடாவுக்கு எதிரான லீக் மட்டும் மழையால் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. அரைஇறுதியில் குல்தீப்,அக்சர் பட்டேலின் சுழல் ஜாலத்தால் இங்கிலாந்தை போட்டுத்தாக்கிய இந்தியா அதே உத்வேகத்துடன் தென்ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளது.



  • Jun 29, 2024 18:37 IST

    41% மழைக்கு வாய்ப்பு - இந்தியா தென் ஆப்ரிக்கா இறுதிப் போட்டி இன்று நடக்குமா? 

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் மழை அச்சுறுத்தல் நிலவுகிறது. அங்கு மழை பொழிவுக்கு 41% வாய்ப்பு உள்ளதாக தற்போதைய வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 



  • Jun 29, 2024 18:09 IST

    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள். 



India Vs South Africa T20 World Cup 2024

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: