13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் போட்டிகள் அரை இறுதிக்குள் நுழைகிறது. புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடத்தில் உள்ள இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள்
முறையே 14 மற்றும் 12 புள்ளிகளுடன் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. 4-வது இடத்தைப் பிடிக்க நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று (நவ.5) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 90 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா 50 முறையும் இந்தியா 37 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் முடிவு வெளியிடப்பட இல்லை. எனினும் இன்று போட்டி நடைபெறும் கொல்கத்தா பிட்ச் யாருக்கு சாதகமாக இருக்கும் என்று பார்ப்போம்.
யாருக்கு சாதகம்?
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சமநிலையான மற்றும் சாதகமான சூழலை வழங்குவதில் புகழ்பெற்றது. இருப்பினும், நேரம் போக போக மைதானத்தில் வேகம் குறைந்து, ஸ்பின்னர்ஸ்களுக்கு சாதமாக அமைகிறது.
சராசரியாக, கொல்கத்தாவில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 236 ரன்களாக இருந்துள்ளது. இதுவரை இங்கு நடைபெற்ற போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 21 முறை வெற்றி பெற்றுள்ளன. அக்யூவெதர் வானிலை நிலவரப்படி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“