இந்தியாவுக்கு எதிரான 3-வது T 20 போட்டியில் தென்னாப்ரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. தர்மஸ்தலாவில் நடைபெற்ற முதல்போட்டி, மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும், தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ய தென் ஆப்ரிக்க அணியும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளது.
வரலாறு மாறுமா? : பெங்களூரு மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டி20 போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் பெரிதாக சாதித்ததில்லை. இன்றைய போட்டியில் இந்த வரலாற்றை திருத்தி எழுதுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மழை வருமா? : பெங்களூருவின் வானம் மேகமூட்டமாக காணப்படும். போட்டி துவங்கும் நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய 78 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதன்காரணமாக, போட்டி தடைபடலாம் என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.