33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Spain Live Score Hockey, Paris Olympics Bronze Medal Match
இந்நிலையில், ஆடவருக்கான ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா ஸ்பெயின் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியானது மாலை 5:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்து இந்திய அணி அதிரடியாக விளையாடியது. ஆனால், ஸ்பெயின் அணி பெனால்டி கார்னர் ஷுட்-அவுட் மூலம் ஒரு கோல் போட்டு முன்னிலை வகித்தது. அப்போது, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோல் போட்டு அதிரடி காட்டினார். இதன் மூலம் முதல் பாதி நேர முடிவில் இரு அணிகளும் 1- 1 என சமனில் இருந்தன.
இதன் பின்னர், இந்தியா அதன் 2வது கோலை பெனால்டி கார்னர் ஷுட்-அவுட் மூலம் போட்டது. இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில், அடுத்த 2 பாதி நேர முடிவில் வரை 2-1 என்கிற கணக்கில் இந்தியா ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இதனிடையே, நடந்த பெனால்டி கார்னர் ஷுட்-அவுட்களை இந்தியாவும் ஸ்பெயினும் மாறி மாறி தவற விட்டனர். ஸ்பெயின் கடைசி நிமிடம் வரை அடுத்த கோல் அடித்து ஆட்டத்தை சமனில் முடிக்க போரடியாது.
ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் இந்திய அணி சிறப்பாக தடுத்து ஆடியது. இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அற்புதமாக தடுத்து இந்தியாவின் முதுகெலும்பாக செயல்பட்டார். இறுதியில், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஸ்பெயினை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, தொடர்ந்து 2-வது முறையாக இந்திய அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 52 ஆண்டுகளில் இது முதன்முறையாகும். மேலும் இந்த பதக்கம் இந்திய ஹாக்கி அணியின் வரலாற்றில் 13-வது பதக்கமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.