india-vs-srilanka | cricket: இலங்கை மண்ணில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா மற்றும் நடப்பு சாம்பியானான இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப் போட்டியானது நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடக்கிறது.
/indian-express-tamil/media/post_attachments/oxeoHOgK9rpXmcQnFMpg.jpg)
50% மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், இறுதிப் போட்டி நடக்கும் கொழும்பில் 50% மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிவிப்புகள் தெரிவித்துள்ளன. இலங்கை தலைநகரான கொழும்பில் பருவ மழை காலம் தொடங்கியுள்ளது. இதனால் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாத மழைப் பொழிவை காண முடிந்தது. மழையின் குறுக்கீடு காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டதையும், தள்ளி வைக்கப்பட்டதையும் நாம் கண்டோம். இந்த நிலையில், நாளை இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை 2023 இறுதிப் போட்டியை மழை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்திய நேரப்படி போட்டி பிற்பகல் 3:00 மணிக்கு தொடங்கும் நிலையில், மாலையில் மேக மூட்டம் காணப்படும் என்றும், தொடர்ந்து மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் தொடக்கத்திலும் மற்றும் மாலையிலும் மழை பெய்ய 50% வாய்ப்பு உள்ளது.
போட்டி தொடர்ந்து முன்னேறும் போது மழை பெய்யும் வாய்ப்பு 68% ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போட்டி அடிக்கடி தடைபடலாம் என்றும், அதன் காரணமாக போட்டி ஓவர்களில் குறைப்புக்கு வழிவகுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நாள் முழுவதும் வெப்பநிலை 24 முதல் 28 டிகிரி வரை இருக்கும்.
IND vs SL ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி மாழை காரணமாக கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?
இந்தியா மற்றும் இலங்கை ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை கைவிடப்பட்டால், ரிசர்வ் டேக்கான ஏற்பாடு உள்ளது. இது நடந்தால், மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து போட்டி மறுநாள் (திங்கட்கிழமை) போட்டி தொடர்ந்து நடக்கும். இதற்கு உதாரணமாக, சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தை குறிப்பிடலாம்.
/indian-express-tamil/media/post_attachments/42SGRikBe9GyctrfjK5i.jpg)
இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இலங்கை:
பாதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), துனித் வெல்லலகே, சஹான் ஆராச்சிகே, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“