India Vs Sri Lanka First T20 Match: இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணி அணிகள் இடையே கவுகாத்தியில் ஞாயிற்றுக்கிழமை முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மழை காரணமாக போட்டி தொடங்காமலே கைவிடப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது கிரிக்கெட் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக உள்ளனர்.
இலங்கையுடனான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி, ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் உள்ளனர். அதோடு, காயத்தில் இருந்து குணமாகி வந்துள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பித் பும்ரா, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியில், கேப்டன் லசித் மலிங்கா, மேத்யூஸ் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இந்த போட்டியில் விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மழை காரணமாக போட்டி தொடங்காமலே கைவிடப்பட்டது.
இந்தியா – இலங்கை அணிகல் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால், போட்டி தொடங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
கவுகாத்தியில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.