India vs Sri Lanka 2nd T20 Match Updates: இலங்கையில் பல்லேகலேயில் உள்ள பல்லேகலே சர்வதேச மைதானத்தில் இலங்கை - இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 2-வது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) நடைபெற்றது. இந்த போட்டியில், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 லைவ் ஸ்கோர் ஆங்கிலத்தில்: India vs Sri Lanka Live Score, 2nd T20
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நேற்று (ஜூலை 27) நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி தரப்பில் சூரியகுமார் யாதவின் அபாரமான அரைசதத்துடன் இந்திய அணி 213 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் பதும் நிஸ்ஸங்க அதிரடியாக விளையாடினார், அந்த அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்கள் கடுமையாகப் போராடினாலும் அந்த அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதனால், இன்று (ஜூலை 28) நடைபெறும் 2வது டி20 போட்டியை வென்று தொடை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், இந்த போட்டியை வென்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை அணியும் மோத இருந்தன.
இந்தியா - இலங்கை அணிகள் இடையே 2வது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், மழை காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், இந்தியா - இலங்கை அணிகள் இடையே 2வது டி20 போட்டி மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிஸ்ஸங்கா மற்றும் குசல் மெண்டி களமிறங்கினர். 3.3 ஒவர்களில் இலங்கை அணி 26 ரன்கள் எடுத்திருந்தபோது, குசல் மெண்டிஸ் 11 பந்துகளில் 10 ரன்கள் அடித்திருந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் பந்தில் ரவி பிஷ்னோய் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, குசல் பெரெரா பேட்டிங் செய்ய வந்தார். இருவரும் அதிரடியாக அடித்து ஆடினர்.
இலங்கை அணி 9.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சிறப்பாக விளையாடி வந்த பதும் நிஸ்ஸங்கா 24 பந்துகளில் 32 ரன்கள் அடித்திருந்தபோது, ரவி பிஷ்னோய் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து, கமிண்டு மெண்டிஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
குசல் பெரெரா - கமிண்டு மெண்டிஸ் இருவரும் சேர்ந்து பொறுப்புடன் விளையாடிய நிலையில், குசல் பெரெரா அரைசதம் அடித்தார்.
இலங்கை அணி 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 23 பந்துகளில் 26 ரன்கள் அடித்திருந்த கமிண்டு மெண்டிஸ், ஹர்திக் பாண்டியா வீசியா பந்தை ரின்கு சிங்கிட கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, அடுத்து சரித் அஸலங்கா பேட்டிங் செய்ய வந்தார்.
34 பந்துகளில் 53 ரன்கள் அடித்திருந்த குசல் பெரெரா அந்த ஓவரின் கடைசி பந்தில், அதே போல ரின்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்டு அவுட் ஆனார்.
இதற்கு அடுத்த ஓவரை வீசிய ரவி பிஷ்னோய், தசன் ஷனகா, வனிட்டு ஹசரங்கா ஆகிய 2 பேரையும் கோல்டன் டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.
இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 162 ரன்ன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் களமிறங்கினர். ஆனால், மழை காரணமாக இந்திய அணிக்கு 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதாவது 8 ஓவர்களில் 78 எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. 2வது ஓவரில் இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனா வீசிய முதல் பந்தில் சஞ்சு சாம்சன் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார்.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால்,- சூரியகுமார் யாதவ் இருவரும் ஆதிரடியாக விளையாடினார்கள். சூரியகுமார் யாதவ் 12 பந்துகளில் 26 ரன்களும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். இருப்பினும், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
இந்திய அணி 6.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 வெற்றி என்ற அளவில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது.
இலங்கை அணி வீரர்கள்:
பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ், குரல் பெரெரா, கமிண்டு மெண்டிஸ், சரித் அசலங்கா (கேப்டன்), தசன் ஷனகா, வனின்டு ஹசரங்கா, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரனா, அசிதா ஃபெமாண்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரியான் பரக், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், முஹம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“