Advertisment

IND vs SL: இந்தியா மீண்டும் தோல்வி... 27 ஆண்டுக்குப் பின் இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி இலங்கை சாதனை!

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியதன் மூலம் இலங்கைக்கு அணி 27 வருடங்களுக்கு பின் இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Sri Lanka Live Score 3rd ODI match today 7 august ind vs sl latest scorecard updates Tamil News

இந்தியா vs இலங்கை - 3வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்:  India vs Sri Lanka Live Score, 3rd ODI

இதனைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் 1-0 என இலங்கை முன்னிலையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டி டை ஆன நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 

இந்த நிலையில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் - இந்தியா பவுலிங்

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. 

இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக பாதும் நிஸ்ஸங்க - அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி களமிறங்கிய நிலையில், இந்த ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது. இந்த ஜோடியை உடைக்க இந்திய பவுலர்கள் நீண்ட நேரம் போராடினர். அப்போது, 19.5-வது ஓவரை வீசிய அக்சர் படேல் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த பாதும் நிஸ்ஸங்க விக்கெட்டை கைப்பற்றினார். 

இதன்பிறகு, களத்தில் இருந்த அவிஷ்க பெர்னாண்டோ உடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதில், அரைசதம் அடித்து அதிரடி காட்டி வந்த அவிஷ்க பெர்னாண்டோ சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 102 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

இதன்பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தனி ஒருவானக போராடி வந்த குசல் மெண்டிஸ் அரைசதம் அடித்து 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரியான் பராக் தனது அறிமுக போட்டியிலே 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். மேலும், சிராஜ், குல்தீப், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  

இதனைத் தொடர்ந்து, 249 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி களமாடினர். இதில் கில் 6 ரன்னிலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் 35 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து இறங்கிய இந்திய வீரர்கள் இலங்கையின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதில் கோலி 20 ரன், ரிஷப் பண்ட் 6 ரன், ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன், அக்சர் படேல் 2 ரன், ரியான் பராக் 15 ரன், ஷிவம் துபே 9 ரன், சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய வாஷிங்டன் சுந்தர் 30 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் இந்திய அணி 26.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம், இலங்கை அணி 110 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இதன் மூலம் இலங்கைக்கு அணி 27 வருடங்களுக்கு பின் இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. 

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ரியான் பராக், ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ். 

இலங்கை: பாதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சே, அசித்த பெர்னாண்டோ.

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி ஒருநாள் தொடரில் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் இலங்கையின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இதன் காரணமாக பல்வேறு விமர்சங்களை சந்தித்து வரும் இந்திய அணி தொடரை சமன் செய்ய இன்று நடைபெறும் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. 

அதேவேளையில், இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்ற இலங்கை கடுமையாக முயற்சிக்கும். இதனால், இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment