இந்தியா - இலங்கை அணிகள் இடையே பல்லகெலேவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்த டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முன்னதாக நடந்த முதலாவது ஆட்டத்தில் 43 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகித்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Sri Lanka Live Score, 3rd T20
இந்த நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) இரவு நடைபெற்றது. ஏற்கனவே பெய்த மழையால் மைதானம் ஈரமாக இருந்ததால் போட்டிக்கு டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
சரியாக 7:40 மணிக்கு டாஸ் போடப்பட்டது, டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக, -வது ஓவரில் மஹீஷ் தீக்ஷனா வீசி கடைசி பந்தை எதிர்கொண்ட யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் அடித்திருந்த நிலையில் எல்.பி. டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து பேட்டிங் செய்ய வந்த சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய வந்தார்.
4 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமல், சமிண்டு விக்ரமசிங்கே வீசிய பந்தை வனிண்டு ஹசரங்காவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ரின்கு சிங் பேட்டிங் செய்ய வந்தார்.
ரிங்கு சிங் 1 ரன் மட்டுமே எடுத்து, மஹீஷ் தீக்ஷனா பந்தில் மதீஷா பதிரானாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார். இந்திய அணி 5.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்திருந்தபொது, கேப்டன் சூரியகுமார் யாதவ் 8 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில், அதிஷா ஃபெர்னாண்டோ வீசிய பந்தை விக்கெட் கீப்பர் குல்சல் மெண்டிஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஷிவம் துபே பேட்டிங் செய்ய வந்தார்.
ஷிவம் துபே 13 ரன்கள் மட்டுமே எடுத்து ரமேஷ் மெண்டிஸ் பந்தில் விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ரியான் பரக் பேட்டிங் செய்ய வந்தார்.
இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சில் இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியதால் இந்திய அணி 8.4 ஓவர்களில் 5 இக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் உறுதியாக நின்று விளையாடி சுப்மன் கில், 37 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வனிண்டு ஹசரங்கா வீசிய பந்தி ஏறி விளையாட முயன்றபோது, விக்கெட் கீப்பர் குசல் மெண்டீஸால் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றப்பட்டார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்ய வந்தார்.
இந்திய அணி 15.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தபோது, அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 26 ரன்கள் அடித்திருந்த ரியான் ஹசரங்கா பந்தில் ரமேஷ் மெண்டிஸ் இடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து ரவி பிஷ்னோய் பேட்டிங் செய்ய வந்தார்.
அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 20-வது ஓவரில் 5வது பந்தில் மஹீஷ் தீக்ஷனா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து மொஹமது சிராஜ் பேட்டிங் செய்ய வந்தார். கடைசி பந்தி எதிர்கொண்ட அவர் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மஹீஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், விக்கிரமசிங்கே, அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிஸ்ஸங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தனர். இந்த ஓபனிங் ஜோடியைப் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் போராட வேண்டியிருந்தது.
இலங்கை அணி 8.5 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்திருந்தபோது, பதும் நிஸ்ஸங்கா 27 பந்துகளில் 26 ரன்கள் அடித்திருந்த நிலையில், ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் ரியான் பரக் இடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த குசல் பெரெரா, குசல் மெண்டிஸ் உடன் ஜோடி சேர்ந்தார்.
குசல் பெரெரா அடித்து ஆட குசல் மெண்டிஸ் நிதானமாக விளையாடினார். இலங்கை அணி 15.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புகு 110 ரன்கள் எடுத்திருந்தபோது, 41 பந்துகளில் 43 ரன்கள் அடித்திருந்த குசல் மெண்டிஸ் ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த வனிண்டு ஹசரங்கா 3 ரன் மட்டுமே எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தில் ரவி பிஷ்னோய் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த சரித் அசலங்கா வாஷிங்டன் சுந்தர் பந்தில் சஞ்சு சாம்சன் இடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ரமேஷ் மெண்டிஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
இலங்கை அணி 18. 2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்டிருந்தபோது, அதுவரை அடித்து ஆடி வந்த குசல் பெரேரா, ரின்கு சிங் வீசிய பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, கமிண்டு மெண்டிஸ் 1 ரன்னிலும், ரமேஷ் மெண்டிஸ் 1 ரன்னிலும், மஹீஷ் தீக்ஷனா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.
இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்ததால் சமன் ஆனது. இதனால், வெற்றியைத் தீர்மாணிக்க வேண்டி, சூப்பர் ஓவர் விளையாட வைக்கப்பட்டது.
இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சூப்பர் ஓவரை வீசினார். முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி சூப்பர் ஒவரில் 2 விக்கெட் இழப்புக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சூப்பர் ஓவரில் அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் மஹீஷ் தீக்ஷனா வீசிய முதல் பந்தை சூரியகுமார் யாதவ் பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இந்திய அணி சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரியான் பராக், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், கலீல் அகமது.
இலங்கை: பாத்தும் நிசாங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா (கேப்டன்), சமிந்து விக்கிரமசிங்க, வனிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, அசித்த பெர்னாண்டோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.