Advertisment

India vs Sri Lanka, Asia Cup 2023 Final: சிராஜ் வேகத்தில் 50 ரன்களுக்குள் சுருண்ட இலங்கை; ஆசிய கோப்பையை எளிதாக வென்ற இந்தியா

Asia Cup 2023 Score, IND vs SL Final Match: சிராஜ், பாண்டியா அசத்தல் பந்துவீச்சு; 50 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆன இலங்கை; விக்கெட் இழப்பின்றி வென்ற இந்தியா; ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தல்

author-image
WebDesk
New Update
Ind vs Sl

Asia Cup 2023 Live Score, IND vs SL Final Match Today

Asia Cup 2023Score, IND vs SL Final Match Today: இலங்கை, கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா ஸ்டேடியத்தில் ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 17) பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

Advertisment

கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், இலங்கைக்கு எதிராக களமிறங்குகிறது. ஆசியக் கோப்பையை வெல்வதன் மூலம் பல நாடுகள் விளையாடும் போட்டியில் கோப்பையை வெல்ல இந்திய அணி சிரமப்படுகிறது என்ற விமர்சனத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்கிறது. 2013-ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றதைத் தவிர, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் கீழ் பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் இந்திய அணி தடுமாறி வருகிறது. 2018-ல் நிதாஹாஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பை மட்டுமே விதிவிலக்குகளாக உள்ளன.

இந்திய அணி வீரர்கள்: 

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்

இலங்கை அணி வீரர்கள்: 

பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), துனித் வெல்லலகே, துஷான் ஹேமந்த, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரனா

ஆசிய கோப்பை 2023, இந்தியா - இலங்கை அணிகள் மோதும் இறுதிப் போட்டியில்,  இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இலங்கை பேட்டிங்

இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஸ்ஸங்க் மற்றும் குசல் பெரேரா களமிறங்கினார். குசல் பெரேரா டக் அவுட் ஆனார். பும்ரா இவரது விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக குசல் மெண்டிஸ் களமிறங்கினார். சிறிது நேரத்திலே நிஸ்ஸங்க் 2 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய சமரவிக்ரமா மற்றும் அசலங்கா டக் அவுட் ஆகினர். இதனால் இலங்கை அணி 8 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறியது. அடுத்து களமிறங்கிய தனஞ்ஜெயா 4 ரன்களில் வெளியேற, ஷனகா டக் அவுட் ஆனார். இதனால் இலங்கை அணி 12 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது.

அடுத்ததாக துனித் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் ஆடி வந்த மெண்டிஸ் 17 ரன்களில் அவுட் ஆனார். இந்த 6 விக்கெட்களையும் சிராஜ் வீழ்த்தினார். அடுத்து துஷன் ஹேமந்தா களமிறங்கி பொறுமையாக ரன் சேர்த்தார். மறுமுனையில் ஆடிவந்த துனித் 8 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ப்ரமோத் 1 ரன்னிலும், பதிரனா டக் அவுட்டும் ஆகினார். இந்த 3 விக்கெட்களையும் பாண்டியா வீழ்த்தினார். இதனால் இலங்கை அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. துஷன் ஹேமந்தா 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை அணி 15.2 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா பேட்டிங்

50 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இதனையடுத்து இந்தியா 6.1 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது. இஷான் கிஷன் 23 ரன்களுடனும், சுப்மன் கில் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ஆசிய கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Cricket Score
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment