Advertisment

IND vs SL Score: ஜேஃப்ரி வாண்டர்சே அபார பந்துவீச்சு... 208 ரன்னில் சுருண்ட இந்திய அணி; இலங்கை மாஸ் வெற்றி

IND vs SL Score Updates: 2nd ODI : இலங்கை - இந்தியா அணிகள் இடையே கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

IND vs SL Match Updates: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-க்கும் 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது, இலங்கை அணி நிர்ணயித்த 230 ரன்கள் எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் சமன் செய்தனர். 

Advertisment

இந்நிலையில், IND vs SL Score Updates: 2nd ODI : இலங்கை - இந்தியா அணிகள் இடையே கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றது.  

ஆட்டத்தின் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால் இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

IND vs SL  Live Score Updates: 2nd ODI : இலங்கை: 29/1 

பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி 6.3 ஓவரில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 25 ரனகள் எடுத்துள்ளது. இலங்கை அணி வீரர் பதும் நிஷன்கா ஆட்டம் இழந்தார். இந்நிலையில் தற்போது அவிஷ்கா ஃபர்னாண்டோ, குசல் மெண்டிக்ஸ் ஆட்டம் இழக்காமல் விளையாடி வருகின்றனர்.  

IND vs SL  Live Score Updates: 2nd ODI : இலங்கை : 80/3

தற்போது 18 வது ஓவர் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை இலங்கை அணி வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 100 ரன்களை நெருங்குவதற்குள் 3 பேர் ஆட்டம் இழந்துள்ளனர். பதும் நிஷன்காவை தொடர்ந்து அவிஷ்கா ஃபர்னாண்டோ, குஷல் மெண்டிஸ் இருவரும் ஆட்டம் இழந்தனர். 

IND vs SL  Live Score Updates: 2nd ODI : இலங்கை : 136/4 

32 வது ஓவர் தற்போது நடந்து வருகிறது. இதுவரை இலங்கை அணி 4  விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.  பதும் நிஷன்காவை தொடர்ந்து அவிஷ்கா ஃபர்னாண்டோ, குஷல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம  ஆகிய 4 பேர் ஆட்டம் இழந்துள்ளனர்.

240 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 241 ரன்கள் எடுத்தால் வெற்றி ஆகும்.

இந்தியா அதிரடி ஆட்டம்

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா இரண்டாவது பேட்டிங் செய்துவருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடியாக அடித்து ஆடினார்கள். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த ஓபனிங் ஜோடி 97 ரன்கள் வரை பங்காளி ஆட்டம் ஆடியது.

இந்திய அணி 13.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்திருந்தபோது, 44 பந்துகளில் 64 ரன்கள் அடித்திருந்த ரோகித் சர்மா, ஜேஃப்ரி வாண்டர்சே வீசிய பந்தில், பதும் நிஸ்ஸங்காவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  அடுத்து, விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தார்.

இந்திய அணி 17.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்தபோது, 44 பந்துகளில் 35 ரன்கள் அடித்திருந்த சுப்மன் கில், ஜேஃப்ரி வாண்டர்சே வீசிய பந்தில், கமிண்டு மெண்டிஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஷிவம் துபே, ஜேஃப்ரி வாண்டர்சே வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து அக்ஸர் படேல் பேட்டிங் செய்ய வந்தார்.

இந்திய அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தபோது, 19 பந்துகளில் 14 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி, ஜேஃப்ரி வாண்டர்சே வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து, ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தார். 

இந்திய அணி 21.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்தபோது,  9 பந்துகளில் 7 ரன்கள் அடித்திருந்த ஷ்ரேயாஸ் ஐயர், ஜேஃப்ரி வாண்டர்சே வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து கே.எல். ராகுல் பேட்டிங் செய்ய வந்தார். 2 பந்துகளி மட்டுமே சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் ஜேஃப்ரி வாண்டர்சே பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்ய வந்தார்.

அதிரடியாக விளையாடிய அக்சர் படேல் 44 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து சரித் அசலங்கா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மிகவும் நிதானமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 40 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து சரித் அசலங்கா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அதே போல, முஹமது சிராஜ் சரித் அசலங்கா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். 

இலங்கை அணியின் ஜேஃப்ரி வாண்டர்சே, சரித் அசலங்கா ஆகியோரின் அபாரமான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணியில் விக்கெட் மலமலவென சரிந்ததால், இந்திய அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், இலங்கை அணி 32 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 1-0 என்ற வெற்றிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

 

Read in english 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment