/indian-express-tamil/media/media_files/Jgiyw34uyr2NZ62L8vuv.jpg)
இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், 3 டி20 போட்டிகள் ஜூலை 28, 29, 31 ஆகிய தேதிகளில் பல்லேகல நகரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதேபோல், 3 ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய தேதிகளில் கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா, டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச டி20-யில் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், அவரது இடத்தை நிரப்ப போவது யார்? ஹர்திக் பாண்டியா மீண்டும் டி20 அணி நியமிக்கப்படுவாரா? என்கிற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்றைய அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை பூர்த்தி செய்யும் வகையில், ஜூலை 18ஆம் தேதி இரவு டி-20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார்.
ஹர்த்திக் பாண்ட்யா சொந்தப் பிரச்னை காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்திய அணி வீரர்கள் விவரம்
T20I அணி: சூர்யகுமார் யாதவ் (C), சுப்மன் கில் (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.
ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (சி), சுப்மான் கில் (விசி), விராட் கோலி, கேஎல் ராகுல் (டபிள்யூ கே), ரிஷப் பந்த் (டபிள்யூ கே), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.