/tamil-ie/media/media_files/uploads/2022/10/IND-vs-SL-Asia-Cup.jpg)
8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அண்டை நாடான வங்க தேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறின. இந்தியா - இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தன.
இந்நிலையில், இந்தியா - இலங்கை அணிகள் மோதிய இறுதிப்போட்டி ஆட்டம் இன்று பிற்பகல் சில்ஹெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே தடுமாறியது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/image-8.png)
வலுவான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய தொடக்க வீராங்கனைகள் அதபத்து மற்றும் அனுஷ்கா சஞ்சீவனி ரன் அவுட் ஆகி வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளுக்கு சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால், இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார்.
இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
தொடர்ந்து 66 ரன்கள் எளிய வெற்றி இலக்கை துரத்திய இந்திய 8.3 வது ஓவரிலே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிப்பிடித்து அசத்தியது. இந்திய அணியில் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார். கடைசிவரை ஆட்டமிழக்காத அவர் 51 ரன்கள் எடுத்தார். 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும், இந்திய அணி 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்று அசத்தியது. இந்திய அணியில் ஆட்ட நாயகியாக ரேணுகா சிங்-கும், தொடரின் நாயகியாக தீப்தி சர்மா-வும் தேர்தெடுக்கப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.