IND vs SL 2nd ODI Match 2023 | IND vs SL 2வது ஒருநாள் போட்டி 2023 நேரடி அறிவிப்புகள்: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கவுகாத்தியில் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை (ஜனவரி 10 ஆம் தேதி) நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
Sri Lanka in India, 3 ODI Series, 2023Eden Gardens, Kolkata 02 February 2023
India 219/6 (43.2)
Sri Lanka 215 (39.4)
Match Ended ( Day – 2nd ODI ) India beat Sri Lanka by 4 wickets
இந்தியா vs இலங்கை: இரு அணியின் பிளேயிங் லெவன்
இலங்கை:
குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, துனித் வெல்லலகே, லஹிரு குமார, கசுன் ராஜித.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், முகமது ஷமி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகமது சிராஜ்.
டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு; இந்தியா பவுலிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் பவுலிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக அவிஷ்க பெர்னாண்டோ – குசல் மெண்டிஸ் களமிறங்கினர். இந்த ஜோடியில் 4 பவுண்டரியை விரட்டிய அவிஷ்க பெர்னாண்டோ சிராஜின் மிரட்டல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, குசல் மெண்டிஸ் நுவனிது பெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி வந்தனர்.
15 ஓவர்கள் வரை விக்கெட்டை தவறவிடாமல் இந்த ஜோடி விளையாடி வந்த நிலையில், தனக்காக முதல் ஓவரையும், அணிக்காக 16 ஓவரையும் வீசிய குலதீப் யாதவ் கடைசி பந்தில் குசல் மெண்டிஸின் விக்கெட்டை கைப்பற்றினார். பின்னர் வந்த தனஞ்சய டி சில்வா விக்கெட்டை தனது 17 ஓவரின் 2வது பந்தில் வீழ்த்தினார் அக்சர் படேல்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானமாக விளையாடி வந்த அறிமுக வீரர் நுவனிது பெர்னாண்டோ அரைசதம் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்த வந்த கேப்டன் தசுன் ஷனக 2 ரன் எடுத்து குலதீப் யாதவிடம் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு களம் புகுந்த வனிந்து ஹசரங்கவுடன் சரித் அசலங்கா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அக்சர் ஓவரை கடத்திய நிலையில், அடுத்து வந்து வீசிய குலதீப்பின் 2வது பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் சரித் அசலங்கா.
மறுமுனையில் இருந்த வனிந்து ஹசரங்க உம்ரன் மாலிக் பந்துவீச்சில் 21 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த சாமிக்க கருணாரத்னே 3 பவுண்டரிகளை விரட்டி 17 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
களத்தில் இருந்த துனித் வெல்லலகே 32 ரன்னிலும், லஹிரு குமார பூஜ்ஜிய ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 17 ரன்கள் எடுத்த கசுன் ராஜித ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில், 39.4 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 215 ரன்கள் எடுத்துள்ளது.
மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 216 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா சுப்மான் கில் ஜோடி சுமாரான தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்ந்த நிலையில், ரோகித் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட்கோலி 4 ரன்களிலும், சுப்மான் கில் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சிறிது நேரம் தாக்குபிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் 289 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனைத் தொடர்ந்து 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாண்டியா – ராகுல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டது.
இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில், பாண்டியா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அக்சர் பட்டேல் ஒரு பவுண்டரி ஒரு சிகசருடன் 21 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய குல்தீப் யாதவ் ராகுலுக்கு பக்கபலமாக விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினார்.
அரைசதம் கடந்த ராகுல் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். 43.2 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 10 பந்துகளை சந்தித்த ராகுல் 64 ரன்களுடனும், குல்திப் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 15-ந் தேதி நடைபெற உள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“