India vs srilanka Tamil News: விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ள நிலையில், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழும் ஷிகர் தவான் தலைமையிலும் உருவாக்கப்பட்ட 2ம் தர இந்திய அணி இலங்கைக்கு பயணித்துள்ளது.
முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களம் கண்டது. இதன்படி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை எடுத்திருந்தது.
263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியோ 36.4 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் விக்கெட் இழப்பிற்கு பின்னர் களம் கண்ட இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் இதுவரை இந்திய வீரர்களில் யாரும் படைக்காத சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் தான் சந்தித்த முதல் பந்து முதலே அதிரடியை துவங்கி இருந்தார். முதலில் வீசப்பட்ட பந்தை சிக்ஸர் விளாசிய இவர், 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார். தொடர்ந்து வீசப்பட்ட பந்துகளை மைதானத்தின் மூலை முடுக்கிற்கெல்லாம் ஓட விட்டு 42 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
Ishan Kishan has announced his arrival in ODIs, IN STYLE! 🙌
— Sony Sports (@SonySportsIndia) July 18, 2021
Tune into Sony Six (ENG), Sony Ten 1 (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/QYC4z57UgI) now! 📺#SLvINDOnlyOnSonyTen #HungerToWin #IshanKishan pic.twitter.com/X6AvW5ADnz
இஷான் கிஷன் சாதனை

அப்படி என்ன சாதனையை இஷான் கிஷன் நிகழ்த்தினார் என்றால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் தனது முதல் அரை சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். இதே போல் தற்போது அவர் அறிமுகமான ஒரு நாள் கிரிக்கெட்டிலும் முதல் அரை சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு வீரரும் படைத்திராத சாதனை ஆகும்.

மேலும் அறிமுக போட்டியிலேயே டி20 மற்றும் ஒருநாள் போட்டி ஆகிய 2 தர போட்டிகளிலும் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகளவில் இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் இஷான் கிஷன். எனவே அவரது இந்த சாதனைக்காக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“