/indian-express-tamil/media/media_files/2025/09/10/india-vs-united-arab-emirates-live-cricket-score-asia-cup-2025-2nd-t20i-match-today-updates-in-tamil-2025-09-10-19-50-27.jpg)
இந்தியா vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் ஆசிய கோப்பை 2025 2வது டி20 போட்டி
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) தொடங்கியது. வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஓமான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.
இந்நிலையில், ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஐக்கிய அரபு அமீரகம் அணியை துபாயில் சந்தித்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரக தரப்பில் தொடக்க வீரர்களாக கேப்டன் முஹம்மது வசீம் - அலிஷன் ஷராபு களமிறங்கிய நிலையில், ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு 22 ரன்னில் அலிஷன் ஷராபு ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த முஹம்மது ஜோஹைப் 2 ரன்னுக்கும், ராகுல் சோப்ரா 3 ரன்னுக்கும் அவுட் ஆகினர். களத்தில் இருந்த தொடக்க வீரரும் கேப்டனுமான முஹம்மது வசீம் 19 ரன்னுக்கும், அவருடன் ஜோடி அமைத்த ஹர்ஷித் கவுஷிக் 2 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டை பறிகொடுத்து, 51 ரன்கள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகம் எடுத்தது. இந்நிலையில் இந்திய அணிக்கு 58 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. 58 ரன்கள் இலக்கை 4.3 ஓவர்களில் எட்டி இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள்
ஐக்கிய அரபு அமீரகம்: முஹம்மது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷராபு, முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா (விக்கெட் கீப்பர்), ஆசிப் கான், ஹர்ஷித் கவுஷிக், ஹைதர் அலி, துருவ் பராஷர், முஹம்மது ரோஹித் கான், ஜுனைத் சித்திக், சிம்ரன்ஜீத் சிங்.
இந்தியா: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி
நேரடி ஒளிபரப்பு
இன்று நடக்கும் போட்டி உட்பட ஆசிய கோப்பைக்கான அனைத்து போட்டிகளும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும், சோனி லைவ் (SonyLIV) ஆப் மற்றும் இணையதளத்திலும் போட்டிகளை நேரலையில் காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us