India vs United Arab Emirates Women’s Asia Cup T20 2024: மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.) அணிகள் இடையே தம்புல்லாவில் ரங்கிரி தம்புல்லா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்க: India vs United Arab Emirates Women’s Asia Cup T20 2024 Live Score: IND beat UAE by 78 runs in Dambulla
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் முதலாவது ஆட்டமாக இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.) அணிகள் இடையே தம்புல்லாவில் ரங்கிரி தம்புல்லா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற யு.ஏ.இ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 201 ரன்கள் குவித்தது. இது மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர்.
இந்திய அணியில், அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 47 பந்துகளில் 66 ரன்களும், ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 64 ரன்களும் ஷஃபாலி வர்மா 18 பந்துகளில் 37 ரன்ன்களும் குவித்தனர். விக்கெட் வீழ்த்துவதற்கு போராடிய யு.ஏ.இ. தரப்பில் அதிகபட்சமாக கவிஷா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் யு.ஏ.இ. அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ஈஷா ஓஜா, தீர்த்த சதிஷ் களமிறங்கினர். யு.ஏ.இ தரப்பில் அதிகபட்சமாக, கவிஷா இகோடாஜ் 32 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். கேப்டன் ஈஷா ஓஜா நிதானமாக விளையாடி 36 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் யு.ஏ.இ. அணி 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் யு.ஏ.இ. அணியை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், இந்த ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணி 2-வது வெற்றியைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.