India vs West Indies 1st T20 LIVE Streaming: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி எளிதில் வென்றது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது.
டெஸ்ட் தொடரில், இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தினாலும், ஒருநாள் தொடரை பொறுத்தவரை, வெஸ்ட் இண்டீசும் இந்தியாவுக்கு ஆட்டம் காட்டியது. கடந்த 10 - 13 சிகப்பு பந்து ஆட்டங்களில் சோபிக்காத வெஸ்ட் இண்டீஸ் அணி, வெள்ளை பந்து கிரிக்கெட்டில், அதாவது ஒருநாள் மற்றும் டி20 மட்டும் ஓரளவிற்கு ஆடி வருகிறது.
வெறும் அதிரடி மயமாகிவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில், வீரர்கள் சிக்ஸர்கள் அடிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். தப்பித் தவறிக் கூட ரொட்டேட் செய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அல்லது ரொட்டேட் செய்வதையே அவர்கள் விரும்புவதில்லை.
ஷிவ்நரைன் சந்தர்பால், ராம்நரேஷ் சர்வான், பிரைன் லாரா, டேரன் கங்கா, கார்ல் ஹூப்பர் என்று அபாரமான பேட்ஸ்மேன்கள் கொண்ட வெஸ்ட் அணி இன்று, ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் சிக்ஸர்கள் அடிப்பவர்களாக மட்டுமே தேர்வு செய்து வைத்துள்ளது.
அந்த வகையில், ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு சற்றே சவால் அளித்த வெஸ்ட் இண்டீஸ், டி20 தொடரில் மேலும் சோதனை தர காத்திருக்கிறது. இந்த குறுகிய ஓவர் மேட்சில், இரு பக்கமும் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் விரட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட், பிரத்வெயிட், ஆண்ட்ரே ரசல் ஆகியோரின் வருகை அந்த அணிக்கு பிரம்மாண்ட பலத்தை சேர்க்கிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், இந்தியா 200 ரன்கள் அடித்தாலும், வெஸ்ட் இண்டீஸ் அதை சேஸ் செய்யும் வாய்ப்பு இருக்கிறது.
விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படுகிறார். அதேபோல், தோனிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்படுவார்கள்.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி, நாளை இரவு 7 மணிக்கு, கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இப்போட்டி ஒளிபரப்பாகும். இணையதளத்தில் ஹாட்ஸ்டாரில் போட்டியை நேரடியாக காணலாம்.
IND v WI LIVE, When and Where to Watch India vs West Indies 1st T20 Cricket Match Live Streaming : அதுமட்டுமின்றி, தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திலும் போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை நேரடியாக ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.