India vs West Indies 1st T20I Live Streaming: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி, நாளை(டிச.6) ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு இந்திய அணி டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துவதில்லை. குறிப்பாக, டி20 போட்டிகளில் சிறப்பாக சேஸிங் செய்யும் இந்தியா, முதல் பேட்டிங் செய்தால் ஏகத்துக்கும் சொதப்புகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து இந்திய அணி தோற்றது.
இந்தச் சூழலில், டி20யில் காரமான, காட்டமான அணியான வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இங்கு வந்துள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் டிசம்பர் 6-ம் தேதியும், 2-வது போட்டி திருவனந்தபுரத்தில் 8-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் 11-ம் தேதியும், முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் டிசம்பர் 15-ம் தேதியும், 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் 18-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் 22-ம் தேதியும் நடக்கிறது.
இந்திய டி20 அணி விவரம்: விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார்.
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி 20 போட்டி எங்கே நடைபெறும்?
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி 20 போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி 20 எத்தனை மணிக்கு தொடங்குகிறது?
போட்டி 07:00 PM IST மணிக்கு தொடங்கும்.
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி 20 போட்டியை எந்த தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பும்?
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி 20 போட்டியின் நேரடி ஸ்ட்ரீமிங்கை நான் எவ்வாறு பார்ப்பது?
நேரடி ஸ்ட்ரீமிங் ஹாட்ஸ்டாரில் கிடைக்கும். இந்தியன்எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.