India vs West Indies 1st Test Day 2 : இந்தியா – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (5.10.18) தொடங்கியது.
இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. நாளை மூன்றாம் நாள், அந்த அணி தொடர்ந்து ஆட உள்ளது. இந்தியாவை விட 555 ரன்கள் பின்தங்கி உள்ளது.
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் 649/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
2-வது நாள் ஆட்டம் தொடங்கியதுமே கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி தனது 24-வது சதத்தை பூர்த்தி செய்தார்.சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 84 பந்தில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜடேஜா தனது சொந்த மைதானத்தில் ஆதிரடியை வெளிப்படுத்த முன்பே திட்டமிட்டிருந்தார் போல. ஜடேஜா 128 பந்தில் 99 ரன்னை தொட்டார். 150-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து தனது முதல் சதத்தை அடித்தார் ஜடேஜா.
149.5 ஓவரில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
All Hail the King ???? @imVkohli
24th Test ton ✅
17th as captain ????
4th century this year ????
2nd fastest to 24 Test ton ????
(More coming, we aren’t done yet) #TeamIndia #INDvWI pic.twitter.com/IgCw1K5JEk
— BCCI (@BCCI) 5 October 2018
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மேற்கிந்தியத் தீவு அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஆட்டம் நேற்று ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அறிமுக வீரரான பிரித்வி ஷா மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பிரித்வி ஷாவை பொறுத்தவரையில் இது அவரின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
India vs West Indies 1st Test Day 2 : இந்தியாவின் வலுவான நிலை:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 72 ரன்களுடனும், ரிஷாப் பண்ட் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். . புஜாரா 86 ரன்களிலும், ரஹானே 41 ரன்களிலும் அவுட்டாகினர்.
read more .. விளையாட்டு தலைப்புகளின் 'டான்' ப்ரித்வி ஷா!
முதல்நாள் ஆட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ப்ரித்வி ஷா, டெஸ்ட் போட்டியின் முதல் சதத்தை தமது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். அறிமுக போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ள ப்ரித்வி ஷாவுக்கு சக வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்குகிறது.