Advertisment

India vs West Indies Live Cricket Score: இன்றைய விளையாட்டு தலைப்புகளின் 'டான்' ப்ரித்வி ஷா!

India vs West Indies 1st Test Live Cricket Score Online: இந்தியாவை எதிர்க்கொள்வது நிச்சயமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு பெரிய சவாலாகத் தான் இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியா VS மேற்கிந்தியத் தீவுகள்

இந்தியா VS மேற்கிந்தியத் தீவுகள்

India vs West Indies  Live Cricket Score : இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (4.10.18) தொடங்கியது.

Advertisment

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவு அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 1 - 4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. இதன்மூலம் வெளிநாட்டு மண்ணில் ஆதிக்கம் செலுத்த முடியாத அணி என்ற சோகமாக வரலாறு தொடர்கதையாகி வருகிறது. அதேசமயம் உள்ளூரில் தொடர்ச்சியாக 9 தொடரை கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக இந்தியா உள்ளது.

India vs West Indies 1st Test Day 1 Live Cricket Score : இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள்!

ஆசியக் கோப்பை போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். வழக்கமாக தொடக்க வீரர்களாக விளையாடும் முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் இப்போட்டியில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கமாக லெவனில் இடம்பெறும் வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்புதான் தெரியவரும். இதற்கு மாற்றாக இம்முறை 12 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

18 வயதான பிரித்வி ஷா இன்றைய போட்டியில் அறிமுகமாக உள்ளார். அதேசமயம் மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரை, 15 வீரர்களில் 5 பேர் மட்டுமே இதற்கு முன்பு இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளனர்.

மேலும் 2012-ம் ஆண்டுக்குப் பின்னர் அந்த அணி டெஸ்டில் பெரிய வெற்றியை பதிவு செய்ததில்லை. இதனால் நம்பர் ஒன் அணியான இந்தியாவை எதிர்க்கொள்வது நிச்சயமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு பெரிய சவாலாகத் தான் இருக்கும்

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், ப்ரித்வி ஷா களமிறங்கினார். இதில், ராகுல் முதல் ஓவரிலேயே கேப்ரியலின் 'இன் ஸ்விங்' பந்தில் 0 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார்.

இதன் பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த புஜாரா - ப்ரித்வி ஷா இணை 2வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்தது. தனது அறிமுக போட்டியிலேயே 99 பந்தில் சதம் விளாசினார் ப்ரித்வி ஷா. அதுமட்டுமின்றி, அறிமுக போட்டியில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிவேக டெஸ்ட் சதம் இதுவாகும்.

மேலும், 18 வயதே ஆன ப்ரித்வி, மிக இள வயதில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இந்தியர் எனும் பெருமையை பெற்றார்.

இதன்பின், புஜாரா 86 ரன்னில் அவுட்டாக, ப்ரித்வி 154 பந்தில் 19 பவுண்டரிகளின் உதவியுடன் 134 ரன்கள் விளாசி அவுட்டானார்.

Virat Kohli India Vs West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment