India vs West Indies: இந்தியா, விண்டீஸ் அணிகள் இடையே விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி டிராவானது.
இந்தியா, விண்டீஸ் அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றது. இந்நிலையில், இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
'தல' தோனி தனது முதல் ஒருநாள் சதத்தை (148) இதே மைதானத்தில் தான் பாகிஸ்தானுக்கு எதிராக காட்டு காட்டு என காட்டினார். யாருயா இவன்? என நாம் வியந்த தோனியை அடையாளப்படுத்திய கிரவுண்ட் இதுவேயாகும்.
ஸோ, தோனிக்கு இதுவொரு ஸ்பெஷலான கிரவுண்ட் என்பதில் சந்தேகமில்லை. தவிர, இங்கு நடந்துள்ள ஏழு ஒருநாள் போட்டிகளில், இந்தியா ஆறு போட்டிகளில் வென்றுள்ளது. ஒரேயொரு போட்டியில் மற்றும் தோற்றுள்ளது. அந்தப் போட்டி விண்டீசுக்கு எதிரானது என்பது கூடுதல் தகவல்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக, கலீல் அஹ்மத் நீக்கப்பட்டு அவருக்கு பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 129 பந்துகளில் 157 ரன்கள் குவித்தார். ராயுடு 73 ரன்கள் எடுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்து விராட் கோலி அபார சாதனை படைத்தார். 205 ஒருநாள் இன்னிங்ஸில் இந்த சாதனையை அவர் புரிந்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இண்டீஸ் அணியில், ஹெட்மயர் 94 ரன்கள் எடுத்து அவுட்டாக, ஷாய் ஹோப் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் எடுத்தார்.
கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் யாதவ் அந்த ஓவரில் முதல் ஐந்து பந்தில் 9 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தை ஷாய் பவுண்டரி அடித்ததால் ஆட்டம் டிராவானது. வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது.
India vs West Indies இரண்டாவது ஒருநாள் போட்டித் துளிகள்
இரவு 10:05 - டிராவான ரன் சேஸிங்கில் அடிக்கப்பட்ட பெஸ்ட் நாட் அவுட் இன்னிங்ஸ்கள்,
123* ஷாய் ஹோப் v இந்தியா, விசாகப்பட்டினம், 2018 *
103* சயீத் அன்வர் v ஜிம்பாப்வே, ஹராரே, 1995
95* கிரிஸ் வோக்ஸ் v இலங்கை, டிரென்ட் பிரிட்ஜ், 2016
84* கெவின் ஓ'பிரைன் v பாகிஸ்தான், டூப்ளின், 2013
இரவு 10:00 - ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தும் டிராவான ஆட்டங்கள்,
340 இங்கிலாந்து v நியூசிலாந்து, நேப்பியர், 2008
338 இந்தியா v இங்கிலாந்து, பெங்களூரு, 2008
321 இந்தியா v வெஸ்ட் இண்டீஸ், விசாகப்பட்டினம், 2018 *
314 நியூசிலாந்து v இந்தியா, ஆக்லாந்து, 2014
இரவு 09:50 - கடைசி பந்தில் வெஸ்ட் இண்டீஸ் போட்டியை டிரா செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது.
இரவு 09:15 - வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார். அந்த அணி வெற்றிப் பெற 27 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே தேவை.
இரவு 08:00 - வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் மற்றும் ஹெட்மெய்ர் அபாரமாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப் பெற இன்னும் 134 ரன்களே தேவை.
இரவு 07:00 - 17 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு இண்டீஸ் அணி 116 ரன்கள் எடுத்துள்ளது. ஹேம்ராஜை 32 ரன்னிலும், சீனியர் வீரர் மார்லன் சாம்யூல்சை 13 ரன்னிலும் குல்தீப் யாதவ் அவுட்டாக்கியுள்ளார்.
மாலை 06:15 - 322 ரன்களை இலக்காக கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது.
மாலை 05:45 - 2018ல் ஒருநாள் போட்டிகளில் கோலி அடித்துள்ள ரன்கள்
112
46*
160*
75
36
129*
75
45
71
140
157*
இன்னிங்ஸ் - 11
ரன்கள் - 1046
ஆவரேஜ் - 149.42
100s - 5
50s - 3
மாலை 05:30 - இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 129 பந்துகளில் 157 ரன்கள் குவித்தார். ராயுடு 73 ரன்கள் எடுத்தார்.
மாலை 05:20 - விராட் கோலி 150 ரன்கள் அடித்தார். இது அவரது நான்காவது 150+ ஆகும்.
மாலை 05:15 - அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த கோலி.
இன்னிங்ஸ் - 205
போட்டிகள் - 213
பந்துகள் - 10813
நேரம் - பத்து வருடம், 67 நாள்
மாலை 05:10 - ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் அடித்தவர்கள்.
டெண்டுல்கர் (2001)
இன்சமாம்-உல் ஹக் (2004)
கங்குலி (2005)
ஜெயசூர்யா (2005)
பிரெய்ன் லாரா (2006)
ராகுல் டிராவிட் (2007)
பாண்டிங் (2007)
காலிஸ் (2009)
ஜெயவர்தனே (2011)
சங்கக்காரா (2012)
தில்ஷன் (2015)
தோனி (2018)
விராட் கோலி (2018)
மாலை 05:00 - விராட் கோலிக்கு இது 38வது ஒருநாள் சதமாகும். தோனி, ரிஷப் பண்ட் அவுட்டான பிறகும் தொடர்ந்து களத்தில் நின்று விளையாடி வருகிறார்.
மாலை 04: 45 - ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்து விராட் கோலி அபார சாதனை படைத்துள்ளார். 205 ஒருநாள் இன்னிங்ஸில் இந்த சாதனையை அவர் புரிந்துள்ளார். விராட் கோலி மொத்தமாக ஆடியுள்ள போட்டிகளின் எண்ணிக்கை 213.
பிற்பகல் 02:15 - முதல் போட்டியில் 36வது ஒருநாள் சதம் விளாசிய விராட் கோலி, இன்றைய போட்டியிலும் சதம் அடிப்பாரா?
View this post on Instagram
Woot woot! 36th ODI ton for @virat.kohli ???? class innings ???????? ???????? #TeamIndia #INDvWI
A post shared by Team India (@indiancricketteam) on
பிற்பகல் 02:00 - 4 ரன்னில் ரோஹித் அவுட். விசாகப்பட்டினத்தில் கோலியின் கடைசி நான்கு இன்னிங்ஸ் ஸ்கோர் இது. அடேங்கப்பா!!
கோலியின் அதிரடி வேட்டை இன்றும் தொடருமா? #INDvWI
live updates : https://t.co/HFcgrp4baA pic.twitter.com/dfz8ahf7go
— IE Tamil (@IeTamil) 24 October 2018
பகல் 01:30 - இதோ ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோஹித், தவான் களமிறங்கியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.